அண்மைய செய்திகள்

recent
-

“வ(ளி)ழி தேடும் புல்லாங்குழல்” நூல்வெளியீடு



செ.கஜானனின் “வ(ளி)ழி தேடும் புல்லாங்குழல்” கவிதை நூல்வெளியீடு 29.12.1016 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பளை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அமைப்பாளர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறும்
இவ்விழாவில் முதன்மை விருந்தினராக
வடமாகாண முதலமைச்சர்  க.வி.விக்கினேஸ்வரனும்
சிறப்பு விருந்தினராக
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.சிறீதரனும்
கெளரவ விருந்தினர்களாக....
பளை அறத்தி அம்பாள் திருக்கோவில் ஆதீனகர்த்தர் சிவஸ்ரீ.நா.பிரபாகரக்குருக்கள்,
புலோப்பளை தூய ராயப்பர் ஆலயப் பங்குத் தந்தை அருட்திரு அ.சில்வஸ்ரர்தாஸ்,
வட மாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம், பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் திருமதி. அ.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், பளை பிரதேச  வைத்திய அதிகாரி சி.சிவரூபன், கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்கள உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி.பி.மதுரநாயகம், கிளிநொச்சி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வே.இறைபிள்ளை, கவிஞர் சுப.சிந்துதாசன், பளை பொலிஸ் அதிகாரி எஸ்.உபாலிமினிப்புர ஆகியோர் கலந்துகொள்வர்.

நிகழ்வொழுங்கில் விருந்தினர் வரவேற்பு,
மங்கல விளக்கேற்றல்,
அகவணக்கம்,
செல்விகள். ப.மதுசா,இ.விதுசா ஆகியோரின் வரவேற்பு நடனம், வரவேற்புரை,
ஆசியுரை,
தலமையுரை,
நூல் வெளியீடு,முதல்,சிறப்புப் பிரதிகள் வழங்கல், நூல் ஆய்வுரை, நவீன கண்ணம்மா நடனம், பிரதம,சிறப்பு விருந்தினர்களின் உரைகள், நூலாசிரியரின் ஏற்புரை என்பன இடம்பெறும்.

செ.கஜானன்
(நூலாசிரியர்)







“வ(ளி)ழி தேடும் புல்லாங்குழல்” நூல்வெளியீடு Reviewed by Author on December 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.