அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில்; நிறுவப்பட்டுவரும் காந்தி சிலை உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளது-காந்திக்கு இது தேவைதானா? அகிம்சை காந்தியா? ஆக்கிரமிப்பு காந்தியா?

•காந்திக்கு இது தேவைதானா?
அகிம்சை காந்தியா? ஆக்கிரமிப்பு காந்தியா?

யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதுவரால் அமைக்கப்பட்டு வரும் காந்தி சிலை உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் வாழும் வட கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 100 காந்தி சிலைகளை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது 10 காந்தி சிலைகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு வடமாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிறுவப்பட்டு வருகிறது.

ராணுவத்தின் உதவியோடு இலங்கை அரசு புத்தர் சிலைகளை நிறுவி வருவதால் ஏற்கனவே தமிழ் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

இந் நிலையில் இந்திய அரசும் காந்தி சிலைகளை தமிழ் மக்கள் மத்தியில் நிறுவி வருவது மக்களுக்கு மேலும் வெறுப்பையும் எரிச்சலையும் எற்படுத்தியுள்ளது.

இதனால் இந்திய தூதுவரால் முல்லைத்தீவில்; நிறுவப்பட்டுவரும் காந்தி சிலை உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளது.

ஒருபுறம் காந்தியை சுட்ட கோட்சேக்கு சிலை வைக்கும் இந்திய அரசு மறுபுறம் யாழ்ப்பாணத்தில் பல காந்தி சிலைகளை நிறுவுகிறது.

இந்திய மோடி அரசின் இந்த இரட்டை வேடத்தினை மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.

ஒரு காலத்தில் காந்தி மீது இலங்கை தமிழ் மக்கள் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.

பல வீடுகளில் காந்திப் படம் வைத்திருந்ததை நாம் அறிவோம். காந்தி பெயரில் சனசமூக நிலையங்கள் கூட இருந்துள்ளன.

ஆனால் அமைதிப் படை என்னும் பெயரில் வந்த இந்திய ராணுவம் செய்த அழிவுகளின் பின்னர் இந்தியா மீதும் அது முன்வைக்கும் காந்தி மீதும் தமிழ் மக்கள் வைத்திருந்த மதிப்பை இழந்துவிட்டனர்.

இப்போது மகாத்மா காந்தி ஒரு அகிம்சை காந்தியாக இல்லாமல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு காந்தியாகவே தமிழ் மக்களுக்கு தெரிகிறார்.

அதனால்தான் காந்தி சிலைகள் தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டு உடைத்து வீழ்த்தப்படுகிறது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இந்திய அரசுக்கு சோரம் போயிருக்கலாம். அவர் காந்தி சிலைகளை அமைக்க இந்திய தூதுவருக்கு துணை போகலாம்.

ஆனால் வன்னி மண்ணின் வீரம் விலை போகாது. அது காந்தி சிலைகளை உடைத்து வீழ்த்தி தன் பெருமையை நிலைநாட்டும்.

Thanks
Balan tholar


முல்லைத்தீவில்; நிறுவப்பட்டுவரும் காந்தி சிலை உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளது-காந்திக்கு இது தேவைதானா? அகிம்சை காந்தியா? ஆக்கிரமிப்பு காந்தியா? Reviewed by NEWMANNAR on December 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.