10 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கின் புகைப்படங்கள் வெளியீடு
10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரியை விற்பனை செய்வதற்கு முயற்சித்த 7 பேர் நேற்றைய தினம் மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறித்த வலம்புரியின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு அடி நீளமான இந்த வலம்புரியை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் வனவிலங்கு அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

10 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கின் புகைப்படங்கள் வெளியீடு
Reviewed by Author
on
January 25, 2017
Rating:

No comments:
Post a Comment