மன்னார் நகர சபைக்கு 2015ல்-50இலட்சம்...2016ல்-75இலட்சம் என்ன செய்தார்கள்---?-மக்கள் என்ன செய்யவில்லை---? செயலாளர்----படங்கள் இணைப்பு
மன்னார் நகர சபைக்கு 2015-50இலட்சம்...2016-75இலட்சம் என்ன செய்தார்கள்---? என்ற மக்களின் கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் விடையினை பெற்றுக்கொள்ள செயலாளரை சந்தித்தேன் கேள்வியை முன்வைத்தோம் ..
என்ன....? செய்யவில்லை என்ற கேள்வியை கேட்டார்--- X.L.றெனால்ட் செயலாளர்.
பண்டிகைக் கால கடைகளால் கிடைக்கப்பெற்ற 05 மில்லியன் ரூபாவில் 02 மில்லியன் பாதீட்டில் உள்ளடங்கப்பட்ட வேலைகளும் மிஞ்சிய ரூபா 03 மில்லியனில் மன்னார் பொது விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
பாதீட்டில் குறிப்பிடப்பட்ட தெரு விளக்குகள் மற்றும் வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகர பகுதியை அடையாளப்படுத்தும் வகையில் நகரின் மத்தியில் மணிக் கூட்டுக் கோபுரம் அமைப்பதற்கு 01.மில்லியன் ஒதுக்கீட்டுள்ளது. குறித்த வேலையை செய்வதற்கு அனுமதியை எதிர்பார்த்து இருக்கிறேன் என X.L.றெனால்ட்செயலாளர் கூறினார்.
மேற்குறித்த வேலைத்திட்டங்கள் மன்னார் நகர சபையின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் 15 கிராம சேவகர் பிரிவுகளையும் சார்ந்த கிராம சேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சனசமூக நிலையங்கள் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் போன்ற சமூகமட்ட அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அழைப்பின் பிரகாரம் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட பலர் கலந்துகொண்டு தீர்மானிக்கப்பட்ட விடையங்களை முறையே அபிவிருத்திப்பணியினை மேற்கொண்டோம்.
இம்முறை அதிகமான தொகை வருமானமாக 75இலட்சம் பெறப்பட்டதாகவும் அதனால் பொருட்களின் விலை அதிகமாக இருந்ததோடு அதிகமான கடைத்தொகுதியினால் போக்குவரத்து பிரச்ச்னையினை மக்கள் எதிர்கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
2016ம் ஆண்டுக்கான பண்டிகைக்கால கடை வியாபாரமானது. 31.12.2016 உடன் நிறைவடைந்துள்ளது. இக்காலப்பகுதியில் மன்னார் மக்களுக்கு போக்குவரத்தில் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் பொதுவான நன்மை கருதி இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிய அனைவருக்கும் நகரசபை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் நகரசபையால் அதிகூடிய விலைக்கு கடைகள் விற்கப்பட்டது என்ற கூற்று ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில் நகரசபையானது பொதுவான அரச நடைமுறைகளுக்கு அமைவாக அதிகுறைந்த ரூபா.13000/- பெறுமதியிலேயே கேள்வி கோரல் மூலம்
(Tender) வழங்கியதாகவும் வியாபாரிகள் ஏலத்தில் தங்களுக்குக் கட்டுப்படியான விலையிலேயே கடைகளைப் பெற்றுக் கொண்டதாகவும் குறித்தவிலைக்கு பெற்றுக்கொண்ட கடைத்துண்டுகளை பிறமாவட்டங்களினை சேர்ந்த வியாபாரிகளுக்கு அதிகூடிய விலைக்கு மன்னார் வியாபாரிகள் விற்றிருந்தால் அதற்கு மன்னார் நகரசபை எப்படி பொறுப்பேற்க முடியும்.
இருப்பினும் சில முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம் இப்படியான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான கடைக்கான கேள்வி கோரலின் போது நிராகரிக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
மேலும் இக்காலப்பகுதியில் குறைவான ஆளணிவளத்தைப் பயன்படுத்தி ஒழுங்குகளை மேற்கொண்டபோதும் சிலஅசௌகரியங்களும் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்வதுடன் சிறப்பாக இக்காலப்பகுதியில் இரவு பகல் பாராது நகரசபைக்காக உழைத்த உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்துப் போலீசார் ஆகியோருக்கும் X.L.றெனால்ட் செயலாளர் நன்றி பாராட்டியதோடு உண்மையாக பணிபுரியும் எனது உத்தியோகத்தர்களையும் என்னையும் தப்பாக விமர்சனம் செய்கின்ற போது நாங்கள் மிகுந்த மன வேதனை அடைவதாக தெரிவித்தார்.
இம்முறை கிடைத்திருக்கும் 75 இலட்சம் பணத்தில் இருந்து என்ன அபிவிருத்திகளை செய்யத்திட்டம் வகுத்துள்ளீர்கள்....?
(ஆரம்பத்தில் 70இலட்சம் தான் ஊடகத்தில் செய்தியாக வெளிவந்தது) தற்போது முழுமையான கணக்கீட்டின் படி நகரசபையால் கடந்த 10 நாட்களில் ரூபா.7.474.447/- வருமானமாகக் கிடைக்கப்பெற்றதுடன் இவ்வருமானமானது 2017ம் ஆண்டு நகர சபை பாதீட்டில் உள்வாங்கப்பட்டு கீழ்வரும் வேலைத்திட்டங்கள் உடனடியாகவே ஆரம்பிக்கப்படவுள்ளன.
- தெருவிளக்கு-LIGHT புதிதாகப் பொருத்துதல்- 1.000.000/-
- இந்துமயான எரியூட்டல் நிலையம் அமைத்தல்-500.000/-
- கத்தோலிக்க சேமக்காலை தேவாலயம் வரைகல் பதித்தல்-500.000/-
- பாதைகள் புனரமைத்தல்- 2.500.000/-
- சுகாதார சேவை ஊழியர்களை அதிகரித்தல் சேவையை அதிகரித்தல் -1.000.000/-
- ஏனைய நிதி பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடி தேவைகளின் முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மன்னாரின் அபிவிருத்தியே எங்கள் நோக்கம்.....
மக்களுக்காக
நியூமன்னார் இணைத்தின் ஊடாக
-வை-கஜேந்திரன் -
மன்னார் நகர சபைக்கு 2015ல்-50இலட்சம்...2016ல்-75இலட்சம் என்ன செய்தார்கள்---?-மக்கள் என்ன செய்யவில்லை---? செயலாளர்----படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
January 04, 2017
Rating:
No comments:
Post a Comment