2016- இன் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் யார் தெரியுமா?
டி20 என்பது மூன்றரை மணி நேர ஆட்டம் தான். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அடுத்தது என்ன அடுத்தது என்ன என அனைவரையும் எதிர்பார்க்க வைக்கும்.
இதனாலேயே இதற்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். ஷேர் மார்க்கெட்டைப்போல ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெரும் பாக்கியம் டி20 பேட்ஸ்மேன்களுக்குத் தான் அதிகம் கிடைக்கிறது.
டி20 கிரிக்கெட் விளையாட்டிற்கு இணை டி20 கிரிக்கெட் தான் என்று கூறினால் மிகையாகாது.
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டிற்கான டி20 டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார் யார்?
பத்தாவது இடம்: மசகட்சா (ஜிம்பாவே)
சமீப வருடங்களில் ஜிம்பாவே வீரர்களிலே மசகட்சா மட்டும் தான் ஐ.சி.சி டாப் 10 வரிசைக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
தொடக்க வீரராக களமிறங்கி அணியின் தேவையைப் பொறுத்து அடித்து ஆடுவதிலும், நிதானமாக ஆடுவதிலும் கைதேர்ந்தவர் மசகட்சா.
இந்த ஆண்டில் மட்டும் இவர் மூன்று அரை சதம் விளாசியுள்ளார்.
மேலும், வங்கதேசத்துடனான ஒரு போட்டியில் 58 பந்தில் 93 ரன் வெளுத்து நாட் அவுட்டாக இருந்தார். சதம் அடிக்கமுடியவில்லையே என போட்டி முடிந்தபிறகு வருத்தப்பட்டார் இவர்.
ஒன்பதாவது இடம்: ரோஹித் ஷர்மா (இந்தியா)
மிகவும் டேஞ்சரான பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா. இவரை விரைவில் அவுட்டாக்கியே தீர வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூட ஒரு போட்டியில் கூறியிருந்தார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தவர் உல்க கோப்பையில் தொடர்ந்து சொதப்பி விட்டார்.
அந்த இன்னிங்ஸில் இன்னும் கொஞ்ச நேரம் அவர் ஆடியிருக்கலாமே என்பது தான் இந்திய ரசிர்களின் வருத்தம்.
இருந்த போதிலும், இந்த ஆண்டின் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் இந்திய வீரர்களில் இவரும் ஒருவர்.
எட்டாவது இடம்: ஜேசன் ராய் (இங்கிலாந்து)
இங்கிலாந்து அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சரவெடி பேட்ஸ்மேன் ஜேசன்ராய்.
உலகக்கோப்பையில் அத்தனை அணிகளையும் நியூசிலாந்து கதறவிட்டுக் கொண்டிருந்தது. இந்தியா உட்பட அத்தனை அணிகளையும் வென்று ஒரு போட்டியில் கூட தோற்காத அணி என வளைய வந்தது.
இங்கிலாந்து அணியில் இந்த ஆண்டில் ஒன்மேன் ஆர்மியாக வலம் வருபவர் ஜேசன் ராய்.
ஏழவது இடம் முகமது ஷஷாத் (ஆஃப்கானிஸ்தான்)
ஆஃப்கானிஸ்தான் அணியின் பிள்ளையார் இவர் தான்.
தொப்பையும் தொந்தியுமாக ஆள் பார்க்க மிரட்டும் வகையில் இருக்கும் இவர் நம்மூர் ஷேவாக் போல எல்லா பந்தையும் எல்லைக் கோட்டுக்கு விரட்டுவதே இவரது வேலையாக கொண்டுள்ளார்.
உங்களுக்கு தெரியுமா? இவர் ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.
இவர் ஒரு ஜாலியான ஆஃப்கானிஸ்தான் ஷேவாக் ஆவார்.
ஆறாவது இடம் ஜோ ரூட் (இங்கிலாந்து)
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆடிய அதிரடியான ஆட்டம் அனைவராலும் மறக்கமுடியாது. ஏன் தென் ஆப்பிரிக்க அணியே மிரண்டு போனது.
அன்றைய தினம் ஒருவேளை பிராத்வெயிட் அந்த நான்கு பந்துகள் மேஜிக்கை நிகழ்த்தியிருக்காவிட்டால் ரூட் தான் உலகக் கோப்பை நாயகனாக வலம் வந்திருப்பார்.
ஐந்தாவது இடம் ஹாசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா)
என்னாச்சி அட உண்மையாதாம்பா..! இவர் தான் ஐந்தாவது இடம்...டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட சரியாக ஆடாத இவர் எப்படி டி20 யி என்று தானே யோசிக்கிறீர்கள்.
இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிராக கேப்டவுனில் 62 பந்தில் 97 ரன் விளாசினார் ஆம்லா. டிவில்லியர்ஸை விட இவர் தான் டி20 போட்டிகளில் எதிரணிக்கு கடும் டார்ச்சராய் இருந்தார்.
நம்பவில்லையென்றால் கீழே புள்ளிவிவரத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்.
நான்காவது இடம் மார்டின் கப்டில்( நியூசிலாந்து)
இந்த ஆண்டின் டி20 உலக கோப்பையை சிக்சர் அடித்து வான வேடிக்கையுடன் ஆரம்பித்தவர் கப்டில். எந்த தருணத்திலும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருபவர்.
தனி ஆளாக நின்று பந்து வீச்சாளர்களை மிரள வைப்பவர்.
மூன்றாவது இடம் ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து)
அதிரடியாக ஆட்டத்தை துவங்கும் இவர் இந்தாண்டில் ஒரு முறை மட்டுமே ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறினார்.
ஃபினிஷர் ரோல் செய்ய வேண்டும் என்ற நிலை எப்போதெல்லாம் இங்கிலாந்து அணிக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பட்லரை அழைப்பார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.
அநேகமாக டி20 போட்டிகளில் இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் பொறுப்பு இவரைத் தேடி வரலாம்.
இரண்டாவது இடம் மேக்ஸ்வெல் ( அவுஸ்திரேலியா)
தனது அதிரடியான ஆட்டத்தினால் இலங்கை வீரர்களை திக்குமுக்காட செய்தவர் மேக்ச்வெல்.
பவுலர்கள் எந்த விதத்தில் பந்து வீசினாலும் களமிறங்கி பட்டையை கிளப்பும் இந்த இந்த நாயகன் டி20 ஃபார்மெட்டின் சூப்பர் ஸ்டார்.
முதலிடம் விராட் கோஹ்லி (இந்தியா)
களத்தில் இறங்கி விட்டால் தனது வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கி விடுவார் இந்திய வீரர் விராட் கொஹ்லி.
டவிராட் கோஹ்லி தயவு செய்து நீங்கள் பேட்டிங் செய்வதை நிறுத்துங்கள், என்றும், விராட் ஒரு ஏலியன்" என்றும் புகழ்ந்து பலர் பலவிதமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு டி20 போட்டியில் விராட் கோஹ்லிக்கு பந்து வீசியவர்களுக்கு மந்திரிக்க தான் வேண்டும். அந்த அளவிற்கு மிரட்டியுள்ளார் விராட்.
இவருக்கு எப்படி ஃபீல்டர்கள் நிறுத்துவது என்றே தெரியவில்லை" என எதிரணி கேப்டன்கள் புலம்புகிறார்கள்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி 20 தொடரில் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் கோஹ்லி.
உலகக்கோப்பையில் அவர் ஆடிய சரவெடி ஆட்டம், காலிறுதியில் ஆஸ்திரேலியாவை நொறுக்கிய கதை ஆகியவற்றை ரீவைண்ட் செய்து பார்ப்பதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்வு தரும்.
2016- இன் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் யார் தெரியுமா?
Reviewed by Author
on
January 01, 2017
Rating:

No comments:
Post a Comment