அண்மைய செய்திகள்

recent
-

உலகில் இன்னும் தொடரும் கொடுமையான சம்பரதாயங்கள் இவைகள் தான்!


உலகம் என்ன தான் நாகரீகமாக மாறிவந்தாலும் பல இடங்களில் காலம் காலமாக இருக்கும் பண்டைகால சம்பரதாயங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி இன்னும் தொடரும் சிலவற்றை பற்றி காண்போம்.

எறும்பு கையுறை

பிரேசில் நாட்டில் இருக்கும் அமேசன் காடுகளில் வாழும் பழங்குடியினர்களில் இளைஞர்கள் தாங்கள் ஆண்மை அடைந்து விட்டோம் என்பதை நிரூபிக்க அரிசியை புடைக்கும் முரத்தால் நெய்திருக்கும் பையில் காட்டெரும்புகளை நிரப்பி கையில் போட்டு 10 நிமிடங்களுக்கு நடனமாட வேண்டும்.

அலகு மற்றும் சூலம் குத்துதல்

மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற முருக கடவுள் கோவில்களிலும், இன்னும் பல முருகர் கோவில்களிலும் தைபூச திருவிழா நடைபெறும். அப்போது அதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் வாயில் வேல் மற்றும் சூலாயுதத்தை குத்தி கொள்வார்கள். அதே போல உடல் முழுவதும் அலகுகளை குத்தியும் கொள்வார்கள்.

சாம்பல் சூப்

அமேசான் காடுகளில் Yanomami என்னும் இனமக்கள் அங்கு சுற்றியுள்ள 250 கிராமங்களில் வாழுகிறார்கள். இவர்கள் வழக்கப்படி அவர்களின் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் உடலை எரித்த சாம்பலை தண்ணீரில் கலந்து சூப் போல இறந்தவரின் குடும்பத்தில் யாராவது குடிக்க வேண்டும். இப்படி செய்தால் இறந்தவர்கள் அவர்களுடனே வாழ்வார்கள் என அர்த்தமாம்!

குழந்தையை வீசுவது

இந்த நடைமுறை இந்தியாவில் உள்ளது. அங்கு இருக்கும் புகழ்பெற்ற சாந்தேஷ்வர் கோவிலுக்கு குழந்தை பிறந்தவுடன் வரும் தம்பதிகள் கீழே நிற்பார்கள். 50அடி உயரத்திலிருந்து அவர்கள் குழந்தையை ஒருவர் கீழே தூக்கி போடுவார். அதை அவர்கள் பெரிய துணியை விரித்து வைத்து சிலர் உதவியுடன் பிடிக்க வேண்டும். இந்த சம்பரதாயம் 500 வருடங்களாக உள்ளது.

பெண் தேடுதல்

இமாலயாவில் உள்ள கிழக்கு பகுதிகளில் Bomena என்னும் ஒரு பாரம்பரிய விடயம் அரங்கேறுகிறது. திருமண வயதில் இருக்கும் ஆண்கள் அங்கு கன்னி பெண்கள் இருக்கும் அறைக்கு இரவு யாருக்கும் தெரியாமல் செல்ல வேண்டும். காலையில் அவர்கள் மாட்டிகொண்டால் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.


உலகில் இன்னும் தொடரும் கொடுமையான சம்பரதாயங்கள் இவைகள் தான்! Reviewed by Author on January 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.