மன்னார் முருங்கனில் 264 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மன்னார் தானியக் களஞ்சியசாலை-Photoa
மன்னார் முருங்கனில் 264 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மன்னார் தானியக் களஞ்சியசாலையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வைபவ ரீதியாக திறந்து வைப்பு
நிதி அமைச்சு மற்றும் உலக வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முருங்கன் பகுதியில் அமைக்கப்பட்ட 'மன்னார் தானியக் களஞ்சியசாலை' இன்று வியாழக்கிழமை(26) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வின் போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,அமைச்சர் றிஸாட் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணைந்து குறித்த 'தானியக் களஞ்சியசாலையினை' வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
நிதி அமைச்சு மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் 264 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த தானியக் களஞ்சியசாலையில் 10 ஆயிரம் மெற்றிக்தொன் தானியத்தை களஞ்சியப்படுத்தும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் மன்னார் விவசாயிகள் தமது உற்பத்திப்பொருட்களான தானியங்களை பாதுகாக்கும் வகையில் குறித்த களஞ்சிய சாiலையில் களஞ்சியப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-குறித்த நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள்,பிரதேசச் செயலாளர்கள் , உதவி அரசாங்க அதிபர்,திணைக்கள தலைவர்கள்,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அமைச்சின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
(26-1-2017)

Reviewed by NEWMANNAR
on
January 26, 2017
Rating:

No comments:
Post a Comment