அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கல்மடு-தென்னிந்திய திருச்சபையின் புனித பவுல் ஆலய உதவி குரு ஆ.பிரகாஸ் மீது தாக்குதல்-

குறித்த திருச்சபையினை சார்ந்த வணபிதா பி.டானியல் மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று தனி மனித உரிமை மீறல் முறைப்பாடு   பதிவு

மன்னார் மாவட்டம் கல்மடு படிவம் 2 கிராமத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் புனித பவுல் ஆலய உதவி குரு   ஆ.பிரகாஸ் என்பவரை கடந்த புதன் கிழமை (11) இடை மறித்த சிலர்  கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ள நிலையில் அவர்  வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதீக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (13.01.2017) மாற்றப்பட்டுள்ள போதும் தாக்குதல்களை மேற்கொண்ட நபர்கள் மன்னார் நீதிமன்றத்தினால்   பிணை வழங்கப்பட்டுள்ளமை குறித்து தென்னிந்திய திருச்சபையின் புனித பவுல்; ஆலய பிரதான குரு வண. பி.டானியல்  மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வெள்ளிக்கிழமை  (13)  தனி மனித உரிமை மீறல் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,

தென்னிந்திய திருச்சபையானது 1947ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கை பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய திருச்சபையாகும்.

1947 ஆம் ஆண்டுக்கு முன் அதாவது 1816ம் ஆண்டு தொடக்கம் 1946ம் ஆண்டு வரை அமெரிக்கன் இலங்கை மிசன் என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில், பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் விடுதலை (சுதந்திரம்) பெற்ற பின்பாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று தென்னிந்திய திருச்சபையாக இயங்கி வருகின்றது.

 இந் நிலையில் இது வரை நான்கு பேராயர்களையும், 200 மேற்பட்ட ஊழியர்களையும் இலங்கையின் அத்தனை மாவட்டத்திலும் பல திருச்சபைகளை கொண்டு கிட்ட தட்ட இலங்கையில் மாத்திரம் பல இலட்சம் அங்கத்துவர்களை கொண்டதிருச்சபையாகும்.

இந்நிலையில் கல் மடு படிவம் 2 எனும் கிராமத்தில் எமது பணியாது 1979ம் ஆண்டு எமது திருச்சபையின் திருப்பணியையும், சமூகப்பணியும் ஆரம்பிக்கபட்டு, செயல் படுத்தி வந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் உக்கிரத்தன்மையை தொடர்ந்து இடம் பெயர்ந்து பூவரசன் குளத்தில் உள்ள எமது திருச்சபையில் வழிபாடுகள் நடாத்தப்பட்டு மக்களுக்கான தற்காலிக வீடு, நிரந்தரவீடு, மலசல கூடவசதி என பல்வேறு பட்ட உதவிகளை எமது திருச்சபை செய்து வந்தது.

 அதன் பின்னர் எமது திருச்சபையில் ஏற்பட்ட சில புரிந்துணர்வு அற்ற தன்மை காரணமாக எமது திருச்சபையில் இருந்த குருமார்கள் பிரிந்து சென்று 'அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை' என்னும் பெயரில் இயங்கி வருகின்றார்கள்.
பல இடங்களில் எமக்கு சொந்தமான பல சொத்துக்கள் இவர்கள் கைவசம் இருக்கின்ற நிலையில் மீள் குடியமர்வு காலங்களில் எமது காணிகளை தம்வசப்படுத்திக்கொண்ட இவ்வமைப்பினர் எமது ஆதனத்தில் வழிபாடுகளை நடாத்தி வந்தனர்.

பின்னர் வழிபாடுகளை நடாத்தாது கைவிடப்பட்ட நிலையில் சபை மக்கள் ஒன்று திரண்டு மறுபடியும் தென்னிந்திய திருச்சபையோடு இணைந்து கொண்டனர்.

எமது காணியிலுள்ள எமது ஆலயத்தில் வழிபாடுகள் நடாத்தி வந்த நிலையில் குறித்த அமைப்பிலுள்ள குருமார்கள் கிட்டதட்ட 10 தொடக்கம்  15 பேர் சில அடியாட்களை கூட்டிக்கொண்டு கடந்த வருடம் இரண்டாம் மாதம் அளவில் எமது ஆலயத்தினுள் பிரவேசித்து பல குழப்பங்களை ஏற்பாடுத்தினார்கள்.

பின்னர் காவல் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பல கட்டங்களாக தொடரப்பட்ட இவ் வழக்கானது கடந்த 05.01.2017 அன்று   நீதிமன்றினால் தீர்ப்பு மேற்குறித்த அமைப்பினருக்கு சாதகமாக வழங்கப்பட்டு ஆட்சி அவர்கள் கைவசம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எமது பேராயர் அதிவண. கலாநிதி. டானியல்  எஸ்.  தியாகராஜா மற்றும் உபதலைவர் வண. கலாநிதி ஜே.ஜீ.தியாகராஜா ஆகியோரின் பரிந்துரையின் படி புதிய காணி பெறப்பட்டு கடந்த 08.01.2017 ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பேராயர் தலைமையில் நடைபெற்றது.

அதன் பின்னர் அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையின் கல் மடு படிவம் 2 பயிற்சிகாலத்திற்காக வந்திருக்கும் சகோதரன் விஜயதர்சன் என்பவர் கிராமத்தில் சில இளைஞர்களை சேர்த்துக்கொண்டு கடந்த 11.01.2017 (புதன்)அன்று எமது அமைப்பை சார்ந்த வண.ஆ.பிரகாஸ் என்பவரை இடைமறித்து கூரிய ஆயுதத்தினால் தாக்கினார்.

 தலையில் பலத்த காயமுற்ற குருவானவர் வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதீக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (13.01.2017)   மாற்றப்பட்டுள்ள நிலையில் அடித்தவருக்கு பிணை வழங்கப்பட்டு அநீதி செய்யபப்ட்டுள்ளது என்பதனை கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

எனவே இந்த வேளையில் கூறிக்கொள்ள விரும்புகின்ற விடையம் என்ன வெனில் நீதிமன்றம் எமக்கு விதித்த கட்டடளைப்பிரகாரம் நாம் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகின்றவர்கள் அல்ல.

மேற்கூறித்த அமைப்பினரே(அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை) தொடர்ந்தும் அமைதிக்கு பங்கம் விளைவித்து வருகின்றனர் என்பதனை அனைத்து அமைப்பிற்கும் மக்களுக்கும் தெரிவிக்கின்றேன்.

ஆன்மீகப்பணியினை ஆற்றுவதற்காக பலதியாகங்களை செய்து வருகின்ற மத குருமார்களை தாக்குவது என்பது மன வருத்தத்திற்குரிய விடயமாகும்.

இப்படிப்பட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தப்படும் போது தக்கதண்டனை வழங்கி எதிர் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாது காப்பாற்ற வேண்டியது மனித உரிமை அமைப்புகளின் தார்மீக கடமையாகும் என கல்மடு படிவம் 2 இல் அமைந்தள்ள

தென்னிந்திய திருச்சபையி புனித பவுல்; ஆலய பிரதான குரு வணக்கத்திற்கூறிய பி.டானியல் மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று  வெள்ளிக்கிழமை (13) மாலை மேற்கொண்டுள்ள தனி மனித உரிமை மீறல் முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு:-


தனி மனித உரிமை மீறல் முறைப்பாடு   பதிவு செய்துள்ள கல்மடு படிவம் 2 கிராமத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபையி புனித பவுல் ஆலய பிரதான குரு வணக்கத்திற்கூறிய பி.டானியல்  தொலைபேசி இலக்கம்.
(077-1790757/ 076-7790757)

-மன்னார் நிருபர்-








மன்னார் கல்மடு-தென்னிந்திய திருச்சபையின் புனித பவுல் ஆலய உதவி குரு ஆ.பிரகாஸ் மீது தாக்குதல்- Reviewed by Author on January 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.