பிரான்சில் இனி 32 மணி நேரம் மட்டுமே வேலை.. அதிரடி அறிவிப்பு: உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்
பிரான்சில் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
அதில் இடது சாரி கட்சியைச் சேர்ந்தவரும் ஜனாதிபதி வேட்பாளருமான Benoit Hamon சமீபத்தில் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் தாம் ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட்டால் ஏழைகள், வேலை இல்லாதோர் மற்றும் இளைஞர்களுக்கு அடிப்படை ஊதியமாக 750 யூரோ(1,21,246 இலங்கை ரூபாய்) வழங்க நடவடிக்கை எடுப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரான்சில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Benoit Hamon மற்றும் போட்டியாளர் Manuel Valls க்கும் இடையே நடந்த விவாதத்தின் போது, Benoit Hamon பிரான்ஸ் நாட்டு மக்கள் வாரத்தில் 32 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் படி சட்டதிருந்தங்களில் தான் மாற்றம் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.
இதில் 3 மணி நேரம் கூடுதலாக அதாவது ஓவர் டைம் சேர்த்துப் பார்த்தால் வாரத்தில் 35 மணி நேரம் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் வாரத்திற்கு மக்கள் 37 மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர். இதில் 3 மணி நேரம் ஓவர் டைமும் அடங்கும். இவ்வாறு குறைந்த அளவு நேரம் வேலை செய்தால் அவர்களில் உடல் நிலை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சிலர் இதை தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
பிரான்சில் இனி 32 மணி நேரம் மட்டுமே வேலை.. அதிரடி அறிவிப்பு: உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்
Reviewed by Author
on
January 28, 2017
Rating:

No comments:
Post a Comment