அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு...

வருடாந்த 
இல்ல விளையாட்டுப்போட்டி... மரதன் ஓட்டம் கடந்த 12-01-2017  தொடக்க நிகழ்வாக நடைபெற்று அதன் தொடர்ச்சியாக இன்று 23-01-2017 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மதியம் 1-45 மணிக்கு ஆரம்பமான இல்ல விளையாட்டுப்போட்டியானது விருந்தினர்களை வாத்திய இசை முழக்கத்துடன் வரவேற்க கொடியேற்றும் நிகழ்வு அதனைத்தொடர்ந்து தீபச்சுடர் ஏற்றும்  நிகழ்வுடன் ஆரம்பமானது இவ்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன்  அரச அதிகாரிகள்  ஏனைய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைமாணவர்கள் மாணவர்கள்  பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கண்கவரும் விதத்தில் இல்ல அலங்காரங்கள்  மாணவர்களின் சாகாசங்கள் நிகழ்வுகள் அமைந்திருந்தது அத்துடன் அனைத்து மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றியீட்டிய மணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் கேடையங்களும் வழங்கப்பட்டது.
  விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த பிரமுகர்களுக்கு  கல்லூரி முதல்வர் அருட்சகோதரர்  ச.இ. றெஜினோல்ட் FSC  அவர்களினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது 



தொகுப்பு -வை-கஜேந்திரன்-


























































மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு... Reviewed by Author on January 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.