உலகிலேயே மிகப்பெரிய நூலகத்துக்கு ஒருநாள் நூலகரான சிறுமி!
அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய நூலகத்திற்கு 4 வயது சிறுமி ஒருநாள் மட்டும் நூலகராக பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் என்ற நூலகம் உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது. இந்த நூலகத்திற்கு அந்நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுமி டாலியா அராணா ஒருநாள் நூலகராக செயல்பட்டுள்ளார்.
அந்நாட்டின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க நூலகரான கர்லா ஹைடனுடன் இணைந்து டாலியா தனது ஒருநாள் நூலகர் பணியை மேற்கொண்டுள்ளார். இரண்டு வயது முதலே வாசிப்பைத் தொடங்கிய டாலியா தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களை வாசித்துள்ளார்.
நூலகராக இருந்த ஒருநாளில் நூலகப்பணியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், குழந்தைகள் எழுதிப்பழக வசதியாக வெள்ளை நிறத்தில் சுவர்பலகையை வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
தனது ஒருநாள் அனுபவம் பற்றி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டும் டாலியா, கர்லா ஹைடனுடன் பணியாற்றியது அபூர்வமான அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய நூலகத்துக்கு ஒருநாள் நூலகரான சிறுமி!
Reviewed by Author
on
January 16, 2017
Rating:

No comments:
Post a Comment