அண்மைய செய்திகள்

recent
-

மடு பூமலந்தான் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆராம்ப பாடசாலை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு


மீள் குடியேற்றக்கிராமமான மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 ஆம் கட்டை பூமலந்தான் கிராமத்தில் அமைக்கப்பட்ட 'பூமலர்ந்தான் ஆராம்ப பாடசாலை' இன்று திங்கட்கிழமை (16) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலையின் அதிபர் எம்.விற்றர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி , மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த ஆரம்ப பாடசாலையை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

-பின்னர் அதிதிகள் பாடசாலை வளாகத்தில் பலன் தரும் மரக்கண்றுகளை நாட்டி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்,பொலிஸ் அதிகாரிகள்,கிராம அலுவலகர்கள்,சமூர்த்தி அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மீள் குடியேற்றக்கிராமமான மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 ஆம் கட்டை பூமலந்தான் கிராமத்தில் உள்ள மக்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி தம்பனைக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர்.

-குறித்த கிராமத்தில் வருடாந்தம் தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில் குறித்த மக்களை மடு பிரதேசச் செயலாளர் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் மடு பூமலந்தான் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்டனர்.
-குறித்த கிராமத்தில் தற்போது வரை சுமார் 200 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையிலே குறித்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மடு வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் மடு பிரதேசச் செயலாளர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் தலையீட்டினால் குறித்த பாடசாலை அமைக்க சகல அனுமதியும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த ஆரம்ப பாடசாலை அமைக்கப்பட்டு வைபவ ரீதியாக இன்று (16) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















மடு பூமலந்தான் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆராம்ப பாடசாலை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு Reviewed by Author on January 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.