நான்கு கால்கள், இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் பிறந்த குழந்தை
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு நான்கு கால்கள், இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் குழந்தை பிறந்துள்ளது.
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னபசவா- லலிதம்மா தம்பதியினர்.
கர்ப்பமாக இருந்த லலிதம்மாவுக்கு கடந்த 21ம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நான்கு கால்கள் மற்றும் இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் குழந்தை பிறந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக விஜயநகர மருத்துவ அறிவியல் கழத்தின் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் இக்குழந்தை கடவுளின் பரிசு எனவும், மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப முடியாது எனவும் லலிதம்மா தெரிவித்துள்ளார்.
இவரிடம் பேசி சமாதானப்படுத்திய மருத்துவர்கள், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நான்கு கால்கள், இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் பிறந்த குழந்தை
Reviewed by Author
on
January 24, 2017
Rating:

No comments:
Post a Comment