“திரும்பி வராது” தீவு - மர்மத்திற்கான விடை அறிவியலின் கையில்!
திரும்பி வராது என்ற பெயரினைக் கொண்ட தீவினைப்பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள்.
தீவுகளுக்கு யாராவது இவ்வாறு பெயர் வைப்பார்களா என்று தானே யோசிக்கிறீர்கள். பெயர் போன்றே சற்று விசித்திரமானது தான் அந்த தீவும்.
கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான தீவுகள் காணப்படுகின்றன. அந்த தீவுகளில் ஒன்றுதான் திரும்பி வராது என்ற பொருளில் என்வைட்டினெட் என அழைக்கப்படுகின்ற தீவுப்பகுதி.
துர்கனா ஏரியைச் சுற்றியுள்ள தீவுகளில் வாழும் பழங்குடியினரே இந்த பெயரினை அந்த தீவிற்கு சூட்டியுள்ளதுடன் இந்த பெயரிற்கான விசித்திர விளக்கத்தினையும் தருகின்றனர்.
அதாவது இந்த தீவுப்பகுதிக்கு சென்றவர்கள் யாருமே திரும்பி வந்ததில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இந்த தீவில் மீன்பிடிப்பதை தொழிலாகக் கொண்ட மனிதர்கள் 1900 ஆம் ஆண்டுப்பகுதியில் ஏராளமாக வாழ்ந்துள்ளார்கள் என கூறப்படுகிறது.
தீவினை விட்டு அதிகளவில் வெளிவராத இந்த மக்கள் வியாபார நோக்கத்திற்காக மாத்திரம் அயல் தீவுகளோடு தொடர்பு வைத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் திடீரென அயல் தீவுகளோடு அந்த தீவிலுள்ள மக்கள் வைத்திருந்த தொடர்பு படிப்படியாக குறைந்துள்ளது.
இதனால் பலர் அடங்கிய அயல் தீவினைச் சேர்ந்த ஆதிவாசிகள் குழுவொன்று நிலைமை குறித்து தெரிந்து கொள்ள அந்த என்வைட்டினெட் தீவிற்கு சென்றுள்ளனர். இருப்பினும் சென்றவர்களும் திரும்பி வரவில்லை.
அண்ணளவாக 1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் அப்பகுதிக்கு ஆராய்ச்சிக்காகச் சென்ற போது அவருக்கு அந்த தீவு குறித்த செய்திகள் காதில் விழ தன்னுடன் வந்த மார்டின் ஷெஃப்லிஸ் மற்றும் பில் டேசன் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்களையும் இது தொடர்பில் அறிவதற்காக அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் இந்த பகுதிச் சென்றால் மனிதர்கள் மட்டுமல்ல ஆராய்ச்சியாளர்கள் கூட திரும்பி வரமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவது போல சென்ற இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை.
இது தொடர்பில் ஆராய விவியன் ஹெலிகொப்டரில் தீவை வட்டமடிக்க அந்த தீவில் மனித நடமாட்டம் எதனையும் காணக் கூடியதாக இருக்கவில்லை.
ஆனால் பழங்குடியினர் வாழ்ந்த குடிசைகள் மாத்திரம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் இது தொடர்பான ஆராய்ச்சிகளும் தீவு தொடர்பாக கதைகளும் நீண்டு கொண்டே செல்கின்றன.
மக்கள் வாழ்ந்த தீவு இன்று மர்மத்தீவாக மாறியுள்ளது. இருப்பினும் என்வைன்டினெட் தீவு தொடர்பான மர்மம் என்றாவது ஒரு நாள் பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை போல் கண்டுபிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

“திரும்பி வராது” தீவு - மர்மத்திற்கான விடை அறிவியலின் கையில்!
Reviewed by Author
on
January 04, 2017
Rating:

No comments:
Post a Comment