அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசிய உணர்வாளர் மரியநாயகத்திற்கு த.தே.கூ இறுதி அஞ்சலி. படம் இணைப்பு.


 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், தமிழ் தேசிய உணர்வாளருமான  'அன்ரன்' என அழைக்கப்படும்  'மரியநாயகத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று புதன் கிழமை காலை இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மன்னார் நானாட்டான் கொவ்வங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்ரன் என அழைக்கப்படும் 'மரியநாயகம்' அவர்கள் தமிழ் தேசிய உணர்வாளராக செயற்பட்டவர். நானாட்டான் ம.வி பாடசாலையின் அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினராகவும்,நானாட்டான் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் செயற்பட்டவர்.கடந்த   திங்கட்கிழமை(2)  காலை திடீர் சுகவீனம் காரணமாக மன்னார்.

மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 55 ஆவது வயதில் காலமானார். அன்னாரது இறுதி அஞ்சலி இன்று காலை அன்னாரது இல்லத்தில் இடம் பெற்றது. இதன்போது அவரது உடலுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், டெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ ஆகியோர் இணைந்து கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினர்.



தமிழ் தேசிய உணர்வாளர் மரியநாயகத்திற்கு த.தே.கூ இறுதி அஞ்சலி. படம் இணைப்பு. Reviewed by Author on January 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.