அண்மைய செய்திகள்

recent
-

மடு பூமலந்தான் கிராமத்தின் எதிர்காலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப பாடசாலையிலேயே தங்கியுள்ளது-எம்.பி.சாள்ஸ்- ( படங்கள் )

பாடசாலைகளில் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம் பெறுகின்ற போது பூமலந்தான் கிராமத்தின் எதிர்கால நோக்கம் கருதி குறித்த கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலை தமிழுக்கு தை பிறந்து வேளைநாட்களில் முதல் நாளான இன்றைய தினம் பாடசாலையின் ஆரம்ப நிகழ்வு நடத்துவதென்பது உண்மையில் வரவேற்கத்தக்க விடையம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

-மடு பூமலந்தான் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலை நேற்று(17) திங்கடக்pழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,

-பூமலந்தான் கிராமத்தின் எதிர்காலம் இந்த பாடசாலையிலேயே தங்கியுள்ளது.இந்த பாடசாலையின் வளர்ச்சி எப்படி அமைகின்றதோ அதன் அடிப்படையிலே இந்த கிராமத்தின் வளர்ச்சியும் அமையப்போகின்றது.

இரண்டு ஆரம்ப பாடசாலைகளை மன்னார் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்று நான் வடமாகாண கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

வெள்ளாங்குளம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள்.

குறிப்பாக அப்பகுதியில் போக்குவரத்து பிரச்சினை உள்ளதன் காரணமாக அப்பிரதேசத்து மாணவர்கள் அதிகலவாக பாடசாலைக்குச் செல்வதற்கு பெரிதும் துன்பப்பட்டார்கள்.

அவர்கள் பாடசலைக்குச் செல்வதற்கு அக்கரை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் குறித்த கிராமத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது அந்த மக்கள் என்னிடம் அக்கிராமத்திற்கான உரிய போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

-அதே போன்று இக்கிராமம் சார்ந்த மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் .

ஒரே ஒரு பேரூந்து தான் மன்னாரில் இருந்து மடு,பண்டிவிருச்சான் போன்ற கிராமங்களுக்கு தனது போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ளுகின்றது.

-குறித்த பேரூந்தில் எல்லா மாணவர்களும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மேலும் ஒரு பேரூந்து சேவையை ஏற்படுத்தி தாருங்கள் .ஏற்படுத்தி தரும் பட்சத்தில் இக்கிராம மாணவர்கள் கட்டையடம்பன் பாடசாலைக்கு செல்ல முடியும் என தெரிவித்திருந்தனர்.

மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு ஆரம்ப பாடசாலைகளை அமைப்பதற்கு இரு கிராமங்களை அடையாளப்படுத்தினோம்.

ஒன்று மடு பூமலந்தான் கிராமத்திலும்,மற்றையது வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தையும் தெரிவு செய்து குறித்த கிராமத்தில் ஆரம்ப பாடசாலைகளை அமைக்க முடியும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.

குறித்த கோரிக்கையை பரிசீலினை செய்த வடமாகாண கல்வி அமைச்சு உடனடியாக அனுமதி வழங்கியது.

ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல அமைச்சுக்களில் உடன் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அங்கு செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளினுடைய அசமந்த போக்கின் காரணமாக பல வேளைத்திட்டங்கள் நீண்டகாலமாக இழுபட்டு சில நேரங்களில் குறித்த வேளைத்திட்டம் நடைபெறாமலும் போவது எமது பிரதேசங்களில் இடம் பெற்றுள்ளது.

ஆனால் குறித்த முன்பள்ளி பாடசாலைகளை உடனடியாக அமைத்து திறந்து வைப்பதற்கு மடு பிரதேசச் செயலாளர் மற்றும் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோரின் துரித முயற்சியின் பலன் தான் காரணமாக உள்ளது.

எங்களுடைய மக்களுக்கு நாங்கள் இருக்கின்ற காலங்களில் எங்களால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என்ற உணர்வு இருக்கின்ற குறித்த இரு அதிகாரிகளையும் நான் பாராட்டுகின்றேன்.

அவர்களுடைய முயற்சி,மக்கள் சேவை தொடர்ந்தும் இப்பிரதேசத்தில் இருக்க வேண்டும்.

-இந்த நிலையில் மடு பூமலந்தான் கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆராம்ப பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

-இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மன நிறைவை அடைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஒரு சமூதாயத்தினுடைய வளர்ச்சியை அவர்கள் ஆனிவேராக இருந்து செயல்படுகின்ற போது அந்த ஆசிரியர்களுக்கு ஒரு மன நிறைவை கொடுக்கும் என்பது எல்லோறும் அறிந்த விடையம்.

-ஒரு பாடசாலையில் இடையில் சென்று தமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்தை விட ஒரு புதிய பாடசாலையில் புதிய மாணவர்கள் மத்தியில் தமது கல்வி செயற்பாட்டை புதிதாக ஆரம்பிப்பதற்கு அதிபர் ஆசிரியர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

எனினும் மாணவர்களினதும்,பாடசாலையினதும் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பு மாத்திரம் போதுமானதாக இல்லை.

மாறாக பெற்றோரின் பங்களிப்பும்,இக்கிராமத்து இளைஞர்,யுவதிகளின் ஒத்துழைப்பும் மிக அவசியமாக உள்ளது.
இதன் போது இப்பாடசாலை ஒரு நல்ல நிலையை அடையும்.என அவர் மேலும் தெரிவித்தார்.



-மன்னார் நிருபர்-
(17-1-2017)

மடு பூமலந்தான் கிராமத்தின் எதிர்காலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப பாடசாலையிலேயே தங்கியுள்ளது-எம்.பி.சாள்ஸ்- ( படங்கள் ) Reviewed by NEWMANNAR on January 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.