அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடும் வறட்சி-பட்டினிச்சாவை எதிர்கொள்ளவுள்ள விவசாயிகள்-Photos

வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமது விவசாய நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலையில் கண்ணீர் விட்டு கத்துகின்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார், மாந்தை மேற்கு,மடு, நானாட்டான்,முசலி ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள விவசாயிகள் கட்டுக்கரை குளம் மற்றும் சிறு குளங்களை நம்பி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தோடு மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் விவசாயிகள் மத்தியில் காணப்பட்டது.

எனினும் தற்போது மழை பெய்யாத நிலையில் குளங்களில் உள்ள நீரும் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.
இதனால் விவசாயிகள் தமது நெற்பயிர்களுக்கு போதிய அளவு நீரை பெற்றுக்கொள்ளுவதற்கு பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

சில தாழ்வான பிரதேசங்களில் வறட்சி பிரச்சினையை ஈடு செய்யக்கூடிய வகையில் ஓரளவு நீர் உள்ள போதும் பல ஏக்கர் கணக்கில் விவசாயத்தை மேற்கொண்டுள்ள விவசாயிகள் நீரின்றி தமது நெற்பயிர்கள் வரட்சியினால் கருகுவதை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

-மேலும் விவசாய செய்கை அழிவடைவதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அதிகலவான விவசாயிகள் தமது விவாசாய பகுதிக்கு வருவதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

-பண வசதி உள்ள சில விவசாயிகள் (டியுபல்) அடி பைப் மூலம் நீரை நெற்பயிர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
டியுபல் என அழைக்கப்படும் அடிபைப் அமைப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை செலவாகின்றது.

-ஆனால் எல்லா விவசாயிகளினாலும் தமது விவசாய நிலங்களில் குறித்த அடி பைப்பை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

-வங்கிகளில் கடணைப்பெற்று,நடைகளையும்,வீட்டு பத்திரங்களையும் அடமானம் வைத்து பணத்தை பெற்று மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த பயிர்ச்செய்கை வறட்சியினால் அழிவடைவதை பார்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

-இதனால் பட்டினிச்சாலை எதிர் நோக்கவுள்ள எங்களுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பாதீக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
(படம்)
-மன்னார் நிருபர்-
(17-1-2017)




மன்னாரில் கடும் வறட்சி-பட்டினிச்சாவை எதிர்கொள்ளவுள்ள விவசாயிகள்-Photos Reviewed by NEWMANNAR on January 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.