அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இறந்தும் வாழும் தம்பிமுத்து நாகராசா

மன்னாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று யாழ்.போதான வைத்தியசாலையில் இறந்து போன தமது குடும்ப உறவினர் ஒருவரின் உடற்பாகங்களை தானம் செய்து முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று யாழ்.போதான வைத்தியசாலையில் இறந்து போன தமது குடும்ப உறவினர் ஒருவரின் உடற்பாகங்களை தானம் செய்து முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது.

-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,


கடந்த 31 ஆம் திகதி மன்னார் பனங்கட்டிக்கொட்டைச் சேர்ந்த தம்பிமுத்து நாகராசா (வயது-65) என்ற நபர் மான்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம் பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூளைச்சாவடைந்தார்.

செயற்கை சுவாசத்தினூடாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர் இதற்கு மேல் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என யாழ் போதனா வைத்தியசலை மருத்துவர்கள் குடும்ப உறவுகளிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது உடல் உறுப்புக்களை தானம் செய்வதன் மூலம் பலரது உயிர் காக்க முடியும் என போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர்.

-எனினும் உடனடியாக மறுப்புத்தெரிவித்த குடும்பத்தினர் முன்மாதிரியாகச் செயற்பட்டு உடல் உறுப்புக்களைத் தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று வியாழக்கிழமை கொழும்பிலிருந்து வந்த விசேட மருத்துவ நிபுணர் குழு மூலம் முக்கிய உடற்பாகங்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

உடல் உறுப்புக்களை தானம் செய்வதன் மூலம் இறந்த பின்னரும் வாழும் பாக்கியம் அவருக்கு கிடைத்ததாகவே உணருகின்றோம் என இறந்தவரின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்ய முன் வந்த அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

எமது உறவின் மரணத்தின் பின் அவரின் உடற்பாகங்கள் மூலம் பலர் வாழப்போகின்றார்கள் என்பது துக்கத்திற்குள்ளும் எமக்கு பெருமையாகவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இந்தக் குடும்பத்தினரின் முன்மாதிரியான செயற்பாட்டை மருத்துவத்துறையினர் பாராட்டியுள்ளனர்.

அத்துடன் இச் செயற்பாடு ஏனையவர்களுக்கும் முன்மாதிரியாக அமையுமெனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, உடல் உறுப்புக்களைத் தானம் செய்து தாம் முன்மாதிரியாகச் செயற்பட்டபோதும், தேவையான ஏற்பாடுகளைச் செய்து சடலத்தை விரைவில் கையளிப்பற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளித்ததாகவும் இறந்து போனவரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை மாலை கவலை வெளியிட்டனர்.

குறிப்பாக மன்னாரில் இடம் பெற்ற விபத்தின் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலத்தை சடல பரிசோதனையின் பின்னர் மீண்டும் தாமதம் இன்றி மன்னாருக்கு கொண்டு வருவதற்கு மன்னார் பொலிஸார் சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-மன்னார் நிருபர்-
(6-1-2017)



மன்னாரில் இறந்தும் வாழும் தம்பிமுத்து நாகராசா Reviewed by NEWMANNAR on January 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.