மன்னார் பேசாலை மீனவரின் படகின் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல்- தலைமன்னார் கடலில் சம்பவம்.(படம்)
மன்னார் பேசாலை மீனவ கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவரின் படகு ஒன்றை இந்திய மீனவர்கள் பயணித்த டொலர் படகு நேற்று முந்தினம் திங்கட்கிழமை(16) இரவு தாக்கியுள்ளதோடு, இந்திய மீனவர்கள் உயிருக்குப்போராடிய பேசாலை மீனவர்களை நடுக்கடலில் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
-இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,,,
-மன்னார் பேசாலை கிராம மீனவர்கள் வழமை போன்று நேற்று முந்தினம் திங்கள் கிழமை (16.01.2017) இரவு மன்னார் பேசாலை கடற்பகுதியில் இருந்து மீன் பிடிக்க தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
-பேசாலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான ரியோன் சொய்சா (வயது 29), ராஜ் குமார் சொய்சா (வயது 36), ரொட்னிசன் சொய்சா (வயது 30) ஆகிய மூவரும் இலுவைப் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவர்கள் தலைமன்னார் கடற்பரப்புக்குள் சுமார் நான்கு கடல் கிலோ மீற்றர் தூரத்தில் படகில் வெளிச்சம் வைத்துக் கொண்டு மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எவ்வித வெளிச்சமும் இன்றி ஒரு இந்திய இலுவைப்படகில் வந்த இந்திய மீனவர்கள் இவ் படகை சுற்றி வந்து தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன் போது பேசாலை மீனவர்கள் மூவரும் அவர்களிடம் தாக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.
பின் பேசாலை மீனவர்களின் படகின் மீது மோதி இவர்களின் படகை சேதப்படுத்திய போது இவர்கள் செய்வதறியாது தொலைபேசி மூலம் சக மீனவர்களின் உதவியை நாடியுள்ளனர்.
-இந்த நிலையில் சக மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதை அறிந்த இந்திய மீனவர்கள் இவர்களை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது இவர்களின் நிலையை அறிந்த பேசாலை பகுதி மீனவர்களால் இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(17) அதிகாலை காப்பாற்றப்பட்டு படகுடன் கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பேசாலை பொலிஸ் மற்றும் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளனர். குறித்த சம்பவம் இடம் பெற்ற போது சுமார் 500ற்கும் மேற்பட்ட இந்திய இலுவைப் படகுகள் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் பாதீக்கப்பட்ட குறித்த மீனவர்கள்தெரிவித்தனர்.

மன்னார் பேசாலை மீனவரின் படகின் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல்- தலைமன்னார் கடலில் சம்பவம்.(படம்)
Reviewed by Author
on
January 18, 2017
Rating:

No comments:
Post a Comment