அண்மைய செய்திகள்

  
-

வேற்றுக்கிரகவாசிகளை தேடுவதை உடனடியாக நிறுத்துங்கள்! பூமிக்கு பேராபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை...


வேற்றுகிரகவாசிகள் குறித்து தேடுவது மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நிறுத்தவில்லை என்றால் அது பாரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும் என பேராசிரியர் ஸ்டீபன் ஹொக்கிங் எச்சரித்துள்ளார்.

அதன் ஊடாக மனிதனுக்கு பூமியில் இடமில்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் உயர்மட்டத்திலான சில உயிரினங்கள் வாழ்வதாகவே அவர் குறிப்பிடுகின்றார். அவற்றிற்கு பூமியை போன்று வாழக்கூடிய சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க இடமளிக்க கூடாதென அவர் கூறியுள்ளார்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் அதன் ஊடாக சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வேற்றுகிரகவாசிகளுக்கு, அது பூமியை கைப்பற்றிக் கொள்ளும் அளவிற்கான ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்திவிடும்.

தற்போது வரையிலும் சிட்டி திட்டம் உட்பட பல திட்டங்களை நாசா நிறுவனம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி முகவர் நிறுவனங்கள் மூலம் வேற்றுக்கிரகவாசிகளை தேடுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரேடீயோ தொழில்நுட்பத்தின் ஊடாக பூமில் இருந்து பல மையில் தூரத்திற்கு தகவல் பகிரப்படுவதாக கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இவ்வாறான உயிரினங்கள் உள்ளதென்றால் அதனுடன் தொடர்பை ஏற்படுத்தினால் அது விரைவில் பூமியை கைப்பற்றிக் கொள்ள கூடும் என பேராசிரியர் ஸ்டீபன் ஹொக்கிங் குறிப்பிட்டுள்ளா்.

எனினும் தற்போது வரையில் இந்த கருத்த தொடர்பில் விஞ்ஞானிகள் தங்கள் அவதானத்தை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

வேற்றுக்கிரகவாசிகளை தேடுவதை உடனடியாக நிறுத்துங்கள்! பூமிக்கு பேராபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை... Reviewed by Author on January 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.