தங்க மாளிகையாக மாறும் வெள்ளை மாளிகை - தங்க மனிதன் செயற்பாட்டால் வியப்பில் மக்கள்.!
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக் கொண்டு உள்ளார்.
ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் வெள்ளை மாளிகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ட்ரம்ப் தங்கத்தை அதிகம் விரும்பும் ஓர் நபராக வர்ணிக்கப்பட்டு வருகின்றவர். அந்த வகையில் வெள்ளைமாளிகையும் தற்போது தங்க வண்ணத்திற்கு மாற்றம் அடைந்துள்ளது.
மாளிகையின் உள்ளே நிறப்பூச்சு, திரைச்சீலை மற்றும் பல இடங்களும் தங்க நிறமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒபாமா காலத்தில் இருந்த பல விடயங்களை தற்போது ட்ரம்ப் வேகமாக மாற்றி வருகின்றார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் உத்தியோக பூர்வ வலைத்தளமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ட்ரம்ப் ஓர் தங்க மனிதனாகவே கூறப்பட்டு வருகின்றார். இவருடைய வீடு தங்கத்தால் நிரம்பி காணப்படுகின்றது.
அதேபோல் இவருடைய தனிப்பட்ட விமானம் கூட தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
ஒபாமா எளிமையான ஜனாதிபதி என பெயர் பெற்றவர் என்ற போதும் ட்ரம்ப் தனது செல்வத்தை வெள்ளை மாளிகை வரை கொண்டு சென்றுள்ளார்.
பதவியேற்று ஒரு சில நாட்களிலேயே இவ்வாறான பல மாற்றங்களை செய்து வரும் ட்ரம்ப்பை அமெரிக்க மக்கள் வியப்புடன் நோக்கி வருகின்றனர்.
தங்க மாளிகையாக மாறும் வெள்ளை மாளிகை - தங்க மனிதன் செயற்பாட்டால் வியப்பில் மக்கள்.!
Reviewed by Author
on
January 25, 2017
Rating:
Reviewed by Author
on
January 25, 2017
Rating:







No comments:
Post a Comment