பிரான்சில் தீவிரவாத தாக்குதல்: 16 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கைது...
பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வந்த குற்றச்சாட்டின் பேரில் 16 வயது சிறுமி உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
Montpellier பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் பயங்கர வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுமி, அவருடைய 21 வயது காதலன் உட்பட 27 மற்றும் 34 வயதுடைய இரண்டு ஆண்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் இவர்கள் பாரிஸின் முக்கிய சுற்றுலா பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வந்தது தெரியவந்துள்ளது.
நான்கு பேரயையும் தொடர்ந்து கண்காணித்து வந்த பொலிசார், அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் தீவிரவாத தாக்குதல்: 16 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கைது...
Reviewed by Author
on
February 10, 2017
Rating:

No comments:
Post a Comment