29 நாடுகள், 1000 போட்டியாளர்கள்! ..... இலங்கை மாணவன் தாய்லாந்தில் சாதனை...
உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
திம்புலாகல - சிறிபுர மத்திய மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் எம்.யொமால் விஸ்வஜித் சிறிவர்தன என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள் தினத்தையொட்டி கடந்த 2ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை தாய்லாந்தில் உலகளாவிய ரீதியாக போட்டி ஒன்று இடம்பெற்றது.
இதில் 29 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தமது கண்டுபிடிப்புக்களை வெளிப்படுத்தினார்கள்.
இவ்வாறு பலத்த போட்டிக்கு மத்தியில் எம்.யொமால் விஸ்வஜித் சிறிவர்தன என்ற மாணவன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவன் தன்னியக்க நீர் விநியோக உபகரணமொன்றை நிர்மாணித்துள்ளார். இதற்காகவே சுமார் 1000 போட்டியாளர்களையும் பின்தள்ளி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தற்போது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

29 நாடுகள், 1000 போட்டியாளர்கள்! ..... இலங்கை மாணவன் தாய்லாந்தில் சாதனை...
Reviewed by Author
on
February 13, 2017
Rating:
Reviewed by Author
on
February 13, 2017
Rating:


No comments:
Post a Comment