மன்னார் மாவட்டத்தில் சமத்துவசங்கத்தின் கலாச்சார விழா...படங்கள் இணைப்பு
மணியளிவில் பள்ளிமுனை பாடசாலை வளாகத்தில் சமத்துவ சங்கமம் அமைப்பினரால் பல்வகை கலாச்சார விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிராதமவிருந்தினராக
மன்னார் மாவட்ட அரசாங்கஅதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய அவர்களும் மன்னார் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பள்ளிமுனை கல்லூரி முதல்வர் கலாதரன் அவர்கள் சமத்துவசங்கத்தின் அதிகாரிகள் மன்னார் மாவட்ட பல்வகைசார் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலாச்சார உத்தியேதகத்தர்கள் கலைசார்ந்த மாணவமாணவிகள் மக்கள் கலரி நாடகக்குழுவினர் இவர்களுடன் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
- பரதம்
- கோலாட்டம்
- கரகாட்டம்
- தமிழ் பாரம்பரிய நடனங்கள்
- சிங்கள கலைர்கலால் பாரம்பரிய நடனங்கள்
- முசலி முஸ்லிம் கலைஞர்களால் கோலாட்டம்
- மக்கள் கலரி நாடககுழுவினரால் (மொழி சார்ந்த நாடகம்)
ஆவரவர் கலாச்சாரத்தினை பிரதி பலிக்கும் வகையில் நிகழ்வு இருந்தது.
எமது அரசாங்க அதிபர் தனது உரையில் இலங்கை வாழ்மக்களின் பிரதான பிரச்சினை என்றால் அது மொழிதான் மொழி புரிந்துணர்வு இருக்குமானால் எந்தப்பிரச்சினையும் வராது நான் சிங்கள அரசாங்க ஊழியர் ஆனால் எனக்கு தமிழ் மொழி பேசத்தெரியும் அது உங்களைப்போல் இலக்கியத்தோடு பேசவராவிட்டாலும் என்னிடம் மக்கள் செய்கின்ற முறைப்பாடுகளை கேட்டு அதற்கான தீர்வினை முன்வைக்கும் அளவிற்கு தமிழை கற்று வைத்திருக்கின்றேன். அந்தளவிற்காவது மொழியினை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இவ்சங்கமானது ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான விழாவினை நடத்துகின்றது அதை இம்முறை மன்னாரில் நடத்தும் படி கேட்டேன் அவர்களும் வந்து நிகழ்ச்சியை செய்கின்றார்கள் எங்கள் மக்கள் தான் வரவேற்பது மிகவும் குறைவாக உள்ளது இனிவருங்காலத்திலாவது இவ்வாறான நிகழ்வுகளுக்கு மக்களும் அரச அரசசார்பற்றவர்களும் ஒத்துழைப்பு வழங்கினால் மிகவும் சிறப்பானதாக அமையும்.
தொகுப்பு வை-கஜேந்திரன்-

மன்னார் மாவட்டத்தில் சமத்துவசங்கத்தின் கலாச்சார விழா...படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 06, 2017
Rating:

No comments:
Post a Comment