முல்லைத்தீவு கேப்பாப்பிலவுக் குடியிருப்பு மக்களின் காணிகளை ...
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினரிடமிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகா
ப்புத் தரப்புக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் நேற்று சந்தித்து கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது முல்லைத்தீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு இராணுவத்தளபதிக்கு தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அறிவுறுத்தியதாக அமைச்சர் சுவாமிநாதன் தக வல் தெரிவித்தார்.
இன்று (நேற்று) காலை ஜனாதிபதியோடு முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளிப்பது பற்றி கதைத்தேன். இக்காணிகளுடைய அபகரிப்பை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி இராணுவத்தளபதியோடு கதைத்தார்.
அதற்கு பதிலளித்த இராணுவத் தளபதி, இந்தக் காணிகளை மிக விரைவிலே மக்களிற்கு திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறார் என அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள இராணுவ ஊடகப்பேச்சாளர் றொசான் செனவிரத்ன கேப்பாப்பிலவு உள்ளிட்ட முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தளபதியின் ஆலோசனையோடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவுக் குடியிருப்பு மக்களின் காணிகளை ...
Reviewed by Author
on
February 16, 2017
Rating:

No comments:
Post a Comment