புதுக்குடியிருப்பில் பத்தாவது நாளாக தொடரும் காணி மீட்பு மக்கள் போராட்டம்
முல்லைத்தீவு - புதுகுடியிருப்பில் பொதுமக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி இன்று 10 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் புதுகுடியிருப்பு பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை அடைத்து கடந்த 3ஆம் திகதி இந்த போராட்டத்தில் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் உள்ள பொதுமக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கையில்,
வாடகை நிலத்தில் இருப்பதையும் விட இந்த போராட்ட இடத்தில் இருந்து எதிரே காணப்படும் எமது காணிகளை பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு சுகம்,
இந்த போராட்ட இடத்தில் இருந்து நாங்கள் எட்டி எட்டி இராணுவ முகாமைப் பார்த்தாலும் அவர்களினால் என்ன செய்யமுடியும்..? அது எங்கள் காணிகள் நாங்கள் பார்க்கின்றோம் என்றனர்.
இந்த நிலையில் எமது காணிகளை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் பத்தாவது நாளாக தொடரும் காணி மீட்பு மக்கள் போராட்டம்
Reviewed by Author
on
February 12, 2017
Rating:

No comments:
Post a Comment