வீதியில் மக்கள்; காணிக்குள் இராணுவம் கேப்பாப்பிலவு போராட்டம் தொடர்கிறது...
விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, இரவு பகலாக கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று இருபத்தேழாவது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள், மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் புளியங்குள இளைஞர்கள் என பலர் நேற்றைய தினமும் பிலவுக்குடியிருப்பிற்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் செய்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மண் எங்களின் சொந்த மண், எம் காணி எம் உரிமை, எமது பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும், எங்களை எங்கள் காணிகளில் சுதந்திரமாக வாழவிடுங்கள், எமது கோரிக்கைக்கு செவிசாய்க்குமா நல்லாட்சி அரசு, போன்ற பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை இலங்கை ஆசிரிய சங்கத்தினரும் நேற்றைய தினம் கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், நல்லாட்சி அரசே நடிக்காதே, இராணுவமே வெளியேறு, விமானப்படையே வெளியேறு, கேட்பாரின்றி நினைத்தாயா? கேப்பாபுலவு மக்களை, இராணுவமே வெளியேறு, வீதியில் மக்கள் காணியில் இராணுவம் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியதுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை யும் முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத் தியர்கள் நாளாந்தம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீதியில் மக்கள்; காணிக்குள் இராணுவம் கேப்பாப்பிலவு போராட்டம் தொடர்கிறது...
Reviewed by Author
on
February 28, 2017
Rating:

No comments:
Post a Comment