சட்டையை கிழித்து ஸ்டாலின் மீது கொடூர தாக்குதல்....
தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்த அமளியின் மத்தியில் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினின் சட்டையை கிழித்து தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அமளியாக மாறி தற்போது 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் இருந்து திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சட்டமன்ற காவலர்கள் முயன்றுள்ளனர்.
ஆனால், காவலர்களின் பிடியில் சிக்காத திமுகவினர் அவையின் மத்தியில் தொடர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெளியில் சென்றுருந்த திமுக எம்.எல்.ஏ பொன்முடி மற்றும் மா.சுப்ரமணியன் ஆகிய இருவரையும் சட்டமன்றத்திற்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவையில் இருந்து ஒவ்வொரு திமுக எம்.எல்,ஏவாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அப்போது, தொடர்ச்சியாக தர்ணாவில் ஈடுப்பட்டு வந்த ஸ்டாலின் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், ஸ்டாலினின் சட்டை கிழிந்துள்ளது. இதே நிலையில் அவர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட காட்சிகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
மேலும், அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, ‘500 காவலர்களை உள்ளே அனுப்பி திமுகவினரை அடித்து உதைத்து அராஜகத்தை நிகழ்த்தியுள்ளனர்.
சட்டமன்றம் சுற்றியும் காவலர்களை நிறுத்தி ஆளும் கட்சி அத்துமீறல்களை கட்டவிழ்த்தியுள்ளது’ என கடும் குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டையை கிழித்து ஸ்டாலின் மீது கொடூர தாக்குதல்....
Reviewed by Author
on
February 19, 2017
Rating:

No comments:
Post a Comment