டொனால்ட் ட்ரம்பிற்கு இன்று முதல் கெட்ட காலம் ஆரம்பம்! ட்ரம்பின் சோதிடர் ஆரூடம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இன்று முதல் துரதிஷ்டமான காலப்பகுதி ஆரம்பமாகுவதாக அவரது சீன சோதிடர் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகங்களின் செய்திகளுக்கமைய, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கூறிய இந்த சோதிடர் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு பின்னர் ட்ரம்பிற்கு நெருக்கடியான நிலை ஏற்படும் என அவர் தேர்தலுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ளார்.
நிவ்யோர்க் நகரில் வாழும் இந்த சீன சோதிடர் தேர்தலுக்கு முன்னர் பன்றியின் வருடத்தில் பிறந்த ஹிலரி கிளின்டனுக்கு சோதிடத்திற்கமைய தடைகள் பிரச்சினைகள் ஏற்படும் என சிறப்பான முடிவுகள் கொடுக்கும் காலப்பகுதியல்ல எனவும், இறுதி காலங்களை கடப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
எப்படியிருப்பினும் அனுதாபங்களை பெற்றுக் கொண்டு இராஜதந்திர திறமைகள் அவருக்கு எதிர்காலத்தில் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் நாய்களின் வருடத்தில் பிறந்தவர் என கூறும் குறித்த சோதிடர், ட்ரம்பின் ஜாதகத்திற்கமைய சிறப்பான காலம் காணப்படும் எனவும், தேர்தலில் வெற்றி பெறுவார் எனவும் அவர் உறுதியாக தெரிவித்திருந்தார்.
எப்படியிருப்பினும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி (இன்று முதல் ஆரம்பமாகும்) கோழியின் வருடம் ஆரம்பமாகின்றமையினால் எதிர்வரும் 2 வருடங்களுக்கு ட்ரம்பிற்கு கெட்ட காலம் உருவாகுவதாக கூறிய சோதிடர் 2018ஆம் ஆண்டு மிகவும் கெட்ட நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு அமைய ஆரூடம் உண்மையை உணர்த்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தினால் 2 உத்தரவுகள் பிறப்பிக்கபப்பட்டுள்ள நிலைமைக்கமையவே இவ்வாறு கூறப்படுகின்றது.
டொனால்ட் ட்ரம்பிற்கு இன்று முதல் கெட்ட காலம் ஆரம்பம்! ட்ரம்பின் சோதிடர் ஆரூடம்
Reviewed by Author
on
February 05, 2017
Rating:

No comments:
Post a Comment