கனடா பிரம்டன் தமிழ் ஒன்றியத்தின் உயிரிழை அமைப்பின் அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைப்பு...
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரின் அமைப்பான உயிரிழை அமைப்பின் அலுவலகம் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்பயிற்சி கட்டிடமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கனடா பிரம்டன் தமிழ் ஒன்றியத்தின் முழுமையான நிதி அனுசரணையுடன் இன்று வடமாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
உயிரிழை அமைப்பின் தலைவர் வி.ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் சி.சிவதாஸ் உயிரிழை அமைப்பின் அலுவலகத்தின் பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இதேவேளை, அலுவலகத்தின் திறப்பு விழா நினைவுக்கல்லை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்வில் அலுவலக திறப்பு விழாவுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சுகவீனம் காரணமாக அவர் சமூகமளிக்கவில்லையென்பதுடன் முதலமைச்சரின் பிரத்தியோக செயலாளர் திருமதி. கேதீஸ்வரன் விஜயலட்சுமி முதலமைச்சர் சார்பில் கலந்து கொண்டு அவரது தகவலைத் தெரிவித்திருந்தார்.
உயிரிழை அமைப்பின் அலுவலகத்தை குறுகிய காலப்பகுதிக்குள் கட்டி முடிப்பதற்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆர்வத்துடன் நேரம் காலம் பார்க்காது உழைத்தவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், அருட் தந்தையர்கள், மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது உறவினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கனடா பிரம்டன் தமிழ் ஒன்றியத்தின் உயிரிழை அமைப்பின் அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைப்பு...
Reviewed by Author
on
March 31, 2017
Rating:

No comments:
Post a Comment