மன்னாரிலிருந்து பக்தர்கள் வவுனியா கல்வாரிக்கு பாதயாத்திரையாக....
கிறிஸ்தவர்கள் தற்பொழுது கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்துவரும் தவக்காலத்தை முன்னிட்டு வவுனியா மவாட்டத்திலுள்ள கோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24.03.2017) நடைபெற இருக்கும் சமய வழிபாட்டில் கலந்து கொள்ளும் முகமாக மன்னார் பகுதியிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரிகை மேற்கொண்டுள்ளுனர்.
மன்னார் பேராலயம், தலைமன்னார், பேசாலை, சிறுத்தோப்பு, தாழ்வுபாடு ஆகிய பங்குகளிலிருந்து 500 மேற்பட்ட பக்தர்கள் இவ் பாதயாத்திரையில் பங்குபற்றுகின்றனர்.
பாதயாத்திரிகைகளை மேற்கொண்டுள்ள இவ் பங்குகளைச் சார்ந்த பக்தர்களுக்கு முதல்நாள் அவர்களின் பங்குகளில் விஷேட வழிபாடுகள் நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை (22.03.2017) அதிகாலை மன்னார் பேராலயத்தில் ஒன்றுகூடி பேராலய பங்குதந்தை அருட்பணி பெப்பி சோசை அடிகளாரால் நடாத்தப்பட்ட வழிபாட்டில் கலந்து கொண்டு அவரிடமிருந்து ஆசீர் பெற்றுக் கொண்டபின் காலை ஆறு மணியளவில் சிலுவை சுமந்தவர்களாக தலைமன்னார் மதவாச்சி வீதியினூடாக வவுனியாவுக்கு தங்கள் பாதயாத்திரியை ஆரம்பித்தனர்.
இவர்கள் வெள்ளிக்கிழமை காலை (24) வவுனியாவில் அமைந்துள்ள கல்வாரியை சென்றடைந்து அன்று அங்கு நடைபெறும் சிலுவைப் பாதை மற்றும் திருப்பலியிலும் கலந்து கொள்வர்.
சம்பந்தப்பட்ட பங்குதந்தையினரின் அனுசரனையுடன் மன்னார் கத்தோலிக்க விசுவாச வளர்ச்சியின் ஊக்குவிப்பாளர்களின் ஏற்பாட்டில் இவ் பாதயாத்திரிகை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
.
மன்னாரிலிருந்து பக்தர்கள் வவுனியா கல்வாரிக்கு பாதயாத்திரையாக....
Reviewed by Author
on
March 23, 2017
Rating:
Reviewed by Author
on
March 23, 2017
Rating:



No comments:
Post a Comment