தட்சனா மருதமடு கட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் 'வடி சாராயம்' காய்ச்சிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் கைது.(படம்)
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தட்சனா மருதமடு கட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் 'வடி சாராயம்' காய்ச்சிக்கொண்டிருந்த நபர் ஒருவரை கைது செய்தள்ளதோடு, அவரிடம் இருந்து காய்ச்சப்பட்ட 'வடி சாராயம்'மற்றும்,உபகரணங்களையும் மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
-மன்னார் மது வரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து,மது வரி திணைக்கள சக பணியாளர்கள் ஒன்றினைந்து நேற்று (16) வியாழக்கிழமை மாலை மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தட்சனா மருதமடு கட்டுப்பகுதில் மடு பொலிஸ் மற்றும்,மடு பிரதேசச் செயலகம் ஆகியவற்றின் உதவியோடு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
-இதன் போது தட்சனா மருதமடு கட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் 'வடி சாராயம்' காய்ச்சிக்கொண்டிருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
-அவரிடம் இருந்து காய்ச்சப்பட்ட 2500 மில்லி லீற்றர் (2 லீற்றர்,500 மில்லி லீற்றர்) வடி சாராயம் மீட்கப்பட்டதோடு அவரிடம் இருந்து வடி சாராயம் காய்ச்சுவதற்கு பயண்படுத்தும் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
-கைது செய்யப்பட்ட நபர் மற்றும் மீட்கப்பட்ட வடி சாராயம்,உபகரணங்கள் மன்னார் மது வரித்திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-மேலதிக விசாரனைகளின் பின் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதோடு,மீட்கப்பட்ட வடி சாராயம் மற்றும் உபகரணங்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மன்னார் மது வரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
தட்சனா மருதமடு கட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் 'வடி சாராயம்' காய்ச்சிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் கைது.(படம்)
Reviewed by Author
on
March 18, 2017
Rating:
No comments:
Post a Comment