இறால் பண்ணையில் குடும்பஸ்தர் தற்கொலை ; பொலிஸார் தீவிர விசாரணை
ுத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராமத்தில் உள்ள களப்பு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிர்மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை ஒன்றில் குத்தகை முறையில் தொழில் செய்துவந்த புளிச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த எம்.எம்.ரிஸ்கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று இரவு தமது இறால் பண்ணைக்குச் சென்று மின்சார விளக்குகளை ஒளிர விட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார். அங்கு அவர் விஷத்தை அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரின் இறால் பண்ணையானது அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளியால் பாதிப்படைந்து இறால் யாவும் ஆற்றில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல லட்சம் ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரும் மன அழுத்த்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அவரை உடப்பு பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இறால் பண்ணையில் குடும்பஸ்தர் தற்கொலை ; பொலிஸார் தீவிர விசாரணை
Reviewed by Vijithan
on
January 18, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 18, 2026
Rating:


No comments:
Post a Comment