மீன்பிடி அமைச்சர் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தம் - முல்லைத்தீவு சமாசத் தலைவர் குற்றச்சாட்டு

நாயாறு களப்பில் தொழில் செய்யும் 23 படகுகளின் அனுமதியைத் தடை செய்யுமாறு பணிப்பாளர் நாயகத்தால் மாவட்டப் பிரதிப் பணிப்பாளருக்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டது. இருந்தும் அந்தப் பகுதியில் இயந்திரப் படகு மூலமான தொழில் தற்போதுவரை நடக்கின்றது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா குற்றஞ் சாட்டினார்.அவர் தெரிவித்ததாவது,
இந்த ஆண்டு மாவட்ட நிர்வா கங்களுக்குத் தெரியாது திணைக்களத்தால் நாயாறு களப்பில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் 23 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவற்றை உடனடியாக நிறுத்துங் கள் என்று மீன்பிடி அமைச்சர் அமர வீர கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார். அதற்கமைய அனுமதிகளை உடன் இரத்துச் செய்யுங்கள் என்று பணிப்பாளர் நாயகம் மாவட்ட பிரதிப் பணிப்பாளருக்குக் கடந்த வியாழக்கிழமை எழுத்தில் உத்தரவிட்டார்.
அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் 23 படகுகளும் இன்றுவரை அந்தப் பகுதியில் தொழில் செய்கின்றன. செம்மலை, அலம்பில், நாயாறு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 800 மீனவ குடும்பங்கள் இதனால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உதவியுடன் மீனவ பிரதிநிதிகள் கொழும்பு சென்று மேற்படி தீர்வைப் பெற்றோம். அமைச்சர் மூலம் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மாவட்ட திணைக்களம் முன்வர வேண்டும்.- என்றார்.
“கடந்த வியாழக்கிழமை இந்த உத்தரவு எமக்குக் கிடைத்தது. உடனடியாக நாயாறு களப்புக்குச் சென்றோம். அங்கு 23 படகுகளின் உரிமையாளர்களும் இருக்கவில்லை. தொழிலுக்குச் சென்றிருந்தனர். எனினும் அவர்களுக்கு உத்தரவு தொடர்பாகத் தெரியப்படுத்தித் திரும்பினோம். தற்போதும் அங்கு தொழில் செய்யப்படுகின்றது என்று கூறப்படுவது தொடர்பாக இன்று நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”- என்று நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாயாறு களப்பில் தொழில் செய்யும் 23 படகுகளின் அனுமதியைத் தடை செய்யுமாறு பணிப்பாளர் நாயகத்தால் மாவட்டப் பிரதிப் பணிப்பாளருக்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டது. இருந்தும் அந்தப் பகுதியில் இயந்திரப் படகு மூலமான தொழில் தற்போதுவரை நடக்கின்றது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா குற்றஞ் சாட்டினார்.அவர் தெரிவித்ததாவது,
இந்த ஆண்டு மாவட்ட நிர்வா கங்களுக்குத் தெரியாது திணைக்களத்தால் நாயாறு களப்பில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் 23 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவற்றை உடனடியாக நிறுத்துங் கள் என்று மீன்பிடி அமைச்சர் அமர வீர கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார். அதற்கமைய அனுமதிகளை உடன் இரத்துச் செய்யுங்கள் என்று பணிப்பாளர் நாயகம் மாவட்ட பிரதிப் பணிப்பாளருக்குக் கடந்த வியாழக்கிழமை எழுத்தில் உத்தரவிட்டார்.

இந்தப் பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உதவியுடன் மீனவ பிரதிநிதிகள் கொழும்பு சென்று மேற்படி தீர்வைப் பெற்றோம். அமைச்சர் மூலம் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மாவட்ட திணைக்களம் முன்வர வேண்டும்.- என்றார்.
“கடந்த வியாழக்கிழமை இந்த உத்தரவு எமக்குக் கிடைத்தது. உடனடியாக நாயாறு களப்புக்குச் சென்றோம். அங்கு 23 படகுகளின் உரிமையாளர்களும் இருக்கவில்லை. தொழிலுக்குச் சென்றிருந்தனர். எனினும் அவர்களுக்கு உத்தரவு தொடர்பாகத் தெரியப்படுத்தித் திரும்பினோம். தற்போதும் அங்கு தொழில் செய்யப்படுகின்றது என்று கூறப்படுவது தொடர்பாக இன்று நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”- என்று நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீன்பிடி அமைச்சர் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தம் - முல்லைத்தீவு சமாசத் தலைவர் குற்றச்சாட்டு
Reviewed by NEWMANNAR
on
March 27, 2017
Rating:

No comments:
Post a Comment