காணாமல் ஆக்கப்பட்டோர்; அடுத்த கட்ட நிலை என்ன? வடக்கு முதல்வருடன் ஆராய முடிவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்திலீடுபடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வட மாகாண முதலமைச்சருடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தி அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் 19வது நாளாக தொடர் போராட் டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்றைய தினம் 2 மணியளவில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் வடமாகாண சபை அமைச்சர் ப.டெனீ ஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் இராணுவத்தால் விசாரணைகளுக்கு அழைத்துச் சென்றதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் யுத்தம் நிறைவடைந்து பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்து சரணடைந்து பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது உறவுகளுக்கு நடந்தது என்ன என பதில் வழங்குமாறு கோரி அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாகாணங்களில் அமைதிவழிப்போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் எட்டு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்ப ட்ட உறவுகளின் பிரதிநிதிகள் சிலர் வட மாகாண முதலமைச்சருடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி அடுத்த கட்டமாக ஜனாதிபதியை சந்தித்து இதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வட மாகாண அமைச்சர் ப. டெனீஸ்வரன், து. ரவிகரன் ஆகியோர் முதலமைச்சருக்கு இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தி கலந்துரையாடுவதற்கு நேரத்தை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
March 27, 2017
Rating:

No comments:
Post a Comment