த.தே.கூட்டமைப்புக்கு 7 நாட்கள் அவகாசம்
கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம் நேற்று 26 நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. சொந்த நிலத்திற்கு செல்வதற்காக வீதிகளில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.எனினும் 26 நாட்களாக தொடரும் போராட்டத்திற்கு இதுவரை எந்தவாரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
தமது சொந்த நிலங்களை இராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
இந்நிலையில் நேற்றையதினம் தமது போராட்ட இடத்துக்கு த.தே. கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுக்கு தங்களுடைய நிலைப்பாடுகளை தெளிவு படுத்தியதோடு ஏழு நாள் கால அவ காசத்தையும் வழங்கினர். அனைவருமாக கலந்துரையாடி எமது பிரச்சினைகளை உரிய இடத்துக்கு கொண்டுசென்று தமக்கான நல்ல தீர்வை பெற்றுத் தருமாரும் தாம் எதிர்நோக்கும் பல்வேறு துன் பங்களையும் எடுத்துரைத்தனர்.
இதன்போது மக்கள் பிரதிநிதிகள் உரிய தீர்வு பெற்றுத்தராத பட்சத்தில் போராட்ட வடிவங்களை மாற்றி போராடுவோம் எனவும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்து காணிக்கு செல்ல வேண்டியநிலை ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டனர்.
இந்த சந்திப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ. கமலேஸ்வரன், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ் வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன், க.சிவநேசன் ஆ,புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Reviewed by NEWMANNAR
on
March 27, 2017
Rating:

No comments:
Post a Comment