தனியார் துறைகளில் உள்ள பதவிகளுக்கும் முயற்சியுங்கள் - வடக்கு முதல்வர்....
வட மாகாணத்தில் உள்ள வேலை கோரும் பட்டதாரிகள் தனியார் துறைகளில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முன்வர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
குறித்த இச்சந்திப்பு தொடர்பாக பட்டதாரிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாம் எமது கோரிக்கைகளாக, வடகிழக் கில் வேலை வாய்ப்பற்றுள்ள பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என் றும் தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் உள்ள முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் வேலையற்ற பட்டதாரிகளின் முழுவிபரத்தையும் துறைசார்ந்த ரீதியில் வகைப்படுத்தி தன்னிடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கையளிக்குமாறும் அதனை மத்திய அமைச்சுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்
அத்துடன் ஆடைத்தொழிற்சாலைகளில் உள்ள பதவிகள், உதவி காவற்றுறை மேலளர் பதவிகள், சுற்றுலாத்துறை போன்ற தொழில் சார்ந்து விண்ணப்பிக்க பட்டதாரிகள் முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொண்டர் ஆசிரியர் சார்ந்த முறைகேடுகள் தொடர்பில் தான் விசாரிப்பதாகவும் மற்றும் மாகாணசபையின் கீழ் உள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்பவும் மத்திய அரசின் கீழ் உள்ள வெற்றிடங்கள் பெறப்பட்டு அவ் வெற்றிடங்களும் நிரப்ப ஆவன செய்யப்படும் எனக் கூறினார்.
தனியார் துறை வேலைவாய்ப்புக்களை நாம் வரவேற்கின்ற போதிலும் அவை இரண்டு வருட கால பயிற்சியின் பின்னர் தான் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே நாம் பல வருடங்களாக வேலையற்றுள்ளோம். மேலும் பலவருடங்கள் பயிற்சி பெறமுடியாது. எனவே இனிவரும் பட்டதாரிகளுக்கு தனியார்துறை வேலைவாய்ப்புக்களை வழங்கி எமக்கு அரச நியமனங்களை வழங்க முன்வரவேண்டும் என பட்டதாரிகள் சார்பில் தாம் கேட்டுக்கொண் டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தனியார் துறைகளில் உள்ள பதவிகளுக்கும் முயற்சியுங்கள் - வடக்கு முதல்வர்....
Reviewed by Author
on
March 26, 2017
Rating:

No comments:
Post a Comment