சீனி மற்றும் கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்..!
கோழி இறைச்சி மற்றும் வெள்ளை சீனிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை, நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி வெள்ளைச் சீனி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வாதார செலவில் குறித்தப்பொருட்களின் தேவைப்பாடு, இறக்குமதி விலை மற்றும் சந்தை பெறுமதியை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளை சீனிக்கு 93 ரூபா, தோலுடனான கோழி இறைச்சிக்கு 410 ரூபா, மற்றும் தோலில்லா கோழி இறைச்சிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 490 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதோடு, எதிர்வரும் நாட்களில் குறித்த பொருட்களின் விலையில் மாற்றத்தை கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
March 14, 2017
Rating:

No comments:
Post a Comment