வவுனியாவில் இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது: வைத்தியர் அகிலேந்திரன்
வவுனியாவில் கடந்த சில தினங்களில் 32 பேருக்கு இன்புளுவன்சா தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியாவில் இன்புளுவன்சா தொற்று காரணமாக இதுவரை 32 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது இதில் 20 பேர் வரையில் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர், ஏனையோர் வைத்தியசாலையில் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் தொற்று ஏற்பட வாய்புக்கள் உள்ளதால் சிறியவர்களை வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களை பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவும். குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார், சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முகக்கவசம் அணிந்து இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.இதேவேளை, இன்புளுவன்சா வைரஸ் தொற்று காரணமாக அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது: வைத்தியர் அகிலேந்திரன்
Reviewed by NEWMANNAR
on
March 23, 2017
Rating:

No comments:
Post a Comment