உலகிலேயே குண்டான ஆண் இவர் தான்....
மெக்சிகோவை சேர்ந்த உலகிலேயே குண்டான ஆணுக்கு எடை குறைப்பு செய்ய அறுவை சிகிச்சை முறையை கையாள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மெக்சிகோவை சேர்ந்தவர் Juan Pedro Franco (32), இவர் 595 கிலோ எடையுடன் உலகிலேயே குண்டான மனிதராக திகழ்ந்து வருகிறார்.
இவர் உடல் எடையை குறைக்க இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் அவர் உடல் எடை மிக அதிகமாக இருப்பதால் சிறிது குறைந்தால் மட்டுமே ஆப்ரேஷன் செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் அவர் கடந்த 3 மாதங்களாக டயட்டில் இருந்து உடல் எடையை சிறிது சிறிதாக குறைத்து வருகிறார்.
Juanக்கு நீரிழிவு நோயும் உள்ளது. அவருக்கு வரும் மே மாதம் 9ஆம் திகதி ஆப்ரேஷன் நடைப்பெறவுள்ளது.
பல வருடங்களாக படுக்கையிலேயே இருக்கும் Juan உடல் எடையை பாதியாக ஆப்ரேஷன் மூலம் குறைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
உலகிலேயே குண்டான ஆண் இவர் தான்....
Reviewed by Author
on
March 30, 2017
Rating:

No comments:
Post a Comment