அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் தினசரி 18 மணி நேரம் தூங்கும் 13 வயது சிறுவன்: காரணம் என்ன?


பிரித்தானியாவின் செஸ்டர்பீல்டு பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் அரிய வகை நோய் காரணமாக தினசரி 18 மணி நேரம் தூக்கத்தில் இருப்பதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் செஸ்டர்பீல்டு பகுதியில் குடியிருந்து வருகிறார் 3 குழந்தைகளுக்கு தயாரான Jan Appleton. இவரது தற்போதைய கவலை எல்லாம் தமது 13 வயது மகனை எண்ணியே.

காரணம் 13 வயதேயான Harry Appleton தினசரி 18 மணி நேரம் அயர்ந்து தூங்குவதுதான் பிரச்னை. ஹரி தூங்கும் நேரத்தில் எவ்வித உணர்ச்சியும் அற்று, எவர் எழுப்பினாலும் அதை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதே பெற்றோரான Jan மற்றும் James ஆகியோரின் கவலையாக உள்ளது.

உலகமே அதிரும்படி சத்தமிட்டாலும் ஹரி எழுவதில்லையாம், ஆனால் நீண்ட பல மணி நேரம் கடந்து அவரது உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்ட பின்னரே தானாக எழுவதுண்டாம்.


பல சமயங்களில் அச்சத்தில் ஹரியை அடுத்துள்ள மருத்துவமனைகளில் சேர்ப்பித்த நாட்களும் உண்டு என ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 22 மாதங்களுக்கு முன்னர் தாம் ஹரியின் இந்த அரிய வகை நோய் குறித்து இவர்கள் கவனிக்க துவங்கியுள்ளனர். அதுவும் ஆண்டின் சில மாதங்களில் மட்டும் ஹரி அளவுக்கு அதிகமாக, 18 மணி நேரம் வரையில் அயர்ந்து தூங்குவதை இவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் தமது மகனின் நிலை கண்டு வருந்திய ஜேம்ஸ் குடும்பம் உடனடியாக சிறப்பு மருத்துவர் ஒருவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதில் கடுமையான சோர்வு காரணமாகவே சிறுவன் ஹரி அளவுக்கு அதிகமாக தூங்கி வழிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறித்த நிலை தமது மகனின் வாழ்க்கையை பாழ்படுத்தும் என ஜேம்ஸ் குடும்பம் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இத்த அரிய வகை தூக்க வியாதி காரணமாக பாடசாலை சேல்வதும் முடியாமல் போனதாம். மட்டுமின்றி அவரது வயதுக்கு ஏற்ற சிறுவர்களுடன் அரட்டை அடிக்கவும் செல்வதில்லையாம்.

தற்போது கல்வியை வீட்டில் வைத்தே தொடரலாம என யோசித்து வருகிறார்களாம் ஜேம்ஸ் குடும்பத்தினர். ஆனால் அதிலும் சிக்கல் உள்ளதாம், காரணம் சிறுவன் ஹரி எப்போது தூக்கத்தில் விழுவான் எப்போது விழித்துக்கொள்வான் என்பது பெற்றோரால் உறுதிபட சொல்ல முடியவில்லையாம்.



பிரித்தானியாவில் தினசரி 18 மணி நேரம் தூங்கும் 13 வயது சிறுவன்: காரணம் என்ன? Reviewed by Author on April 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.