பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு.....
பாகிஸ்தானில் எல்லையோர நகரத்தில் உள்ள மசூதியை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 22 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பிரச்சினார் நகரில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
மசூதி ஒன்றில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது பெண்களின் நுழைவு வாயிலுக்கு அருகில் திடீரென கார் குண்டு வெடித்து என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 90க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பிரச்சினார் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 22 பேர் மட்டுமே பலியானதாகவும், எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் அறிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவ ஹெலிகொப்டரை அனுப்பியுள்ள பாகிஸ்தான் அரசு, ரத்த தானம் செய்ய முன்வருமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை அறிவிக்கவில்லை.
கடந்த மாதம் தெற்கு பாகிஸ்தானில் உள்ள சூஃபி மசூதி ஒன்றில் நடந்த இது போன்ற தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இத்தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு.....
Reviewed by Author
on
April 01, 2017
Rating:
Reviewed by Author
on
April 01, 2017
Rating:


No comments:
Post a Comment