கேப்பாப்பிலவில் 468 ஏக்கர் காணிகள் மே 15-ம் திகதி விடுவிக்கப்படும் - சுவாமி
முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 468 ஏக்கர் காணிகள் எதிர்வரும் மே மாதம் 15-ம் திகதி விடுவிக்கப்படவுள்ளன.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களிடம் நேற்று கருத்துப் பகிர்கையில்,
கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் மூலமாக பாதுகாப்பு அமைச்சு கேப்பாப்பிலவில் உள்ள 279 ஏக்கர் காணிகளை மே மாதம் 15-ம் திகதிக்கு முன்னர் விடுவிடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.
இந்த 279 ஏக்கரிலே 248 ஏக்கர் அரச காணிகள் கேப்பாப்பிலவுஇருந்தும் 31 ஏக்கர் தனியார் காணிகள் சீனியாமோட்டையிலிருந்து மேற்குறிப்பிட்ட திகதியிலேயே விடுவிக்கப்படும்.
மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கோரிக் கைக்கு அமைய ஐந்து மில்லியன் ரூபாய் நிதி எமது மீள்குடியேற்ற அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்து 189 ஏக்கர் தனியார் காணிகளும் ஒரு மாதத்துக்குள் கேப்பாப்பிலவில் விடுவிக்கப் படும்.
மேற்குறிப்பிட்ட பிரகாரம் மொத்தமாக 468 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு அமைச்சின் மூலமாக விடுவிக்கப் படும்.
இக்காணிகள் விடு விப்பு விடயங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின தும் பிரதமர் ரணில் விக் கிரமசிங்கவினதும் உத்தரவுக்கமைய நடை முறைப்படுத்தப்படுகின்றன எனவும் மீள் குடியேற்ற அமைச் சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவில் 468 ஏக்கர் காணிகள் மே 15-ம் திகதி விடுவிக்கப்படும் - சுவாமி
Reviewed by Author
on
April 02, 2017
Rating:

No comments:
Post a Comment