நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை....5பாகை செல்சியஸினால் அதிகரித்த வெப்பநிலை!
நாட்டில் பல மாவட்டங்களின் வெப்பநிலை 5பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலை அடுத்த மாதம் நடுப்பகுதி வரையிலும் நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச வெப்பநிலையாக, திருகோணமலையில் 37.7 பாகை சென்டிகிரேட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் இவ்வாறு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதிகரித்துள்ள இந்த வெப்ப நிலையில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற ஆடைகளைப் பயன்படுத்த கொள்ள வேண்டும் என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் இப்பொழுது முன்னர் எப்பொழும் இல்லாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ள இந்த நிலையில், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெப்ப சூழ்நிலையால் பல்வேறு தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கான காரணிகள் ஏற்படக்கூடும் என்றும், அதற்கு ஏற்றால் போல மக்கள் பாதுகாப்பான விதத்தில் செயற்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை....5பாகை செல்சியஸினால் அதிகரித்த வெப்பநிலை!
Reviewed by Author
on
April 24, 2017
Rating:
Reviewed by Author
on
April 24, 2017
Rating:


No comments:
Post a Comment