பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறந்த பேராயர்கள்: லண்டனில் உடல்கள் கண்டுபிடிப்பு...
லண்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த ஐந்து கேன்டர்பெர்ரி பேராயர்களின் உடல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருக்கும் லாம்பெத் அரண்மனை பக்கத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் கட்டட பணியாளர்கள் மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஐந்து எஞ்சிய கேன்டர்பெர்ரி பேராயர்களின் உடல்கள் முப்பது முன்னணி சவப்பெட்டிகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது.
இவர்கள் ஐந்து பேரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ஆவார்கள்.
ஐந்து பேராயர்களின் உடல்களில் ஒருவரது உடல் பேன்கிராஃப்ட் பேராயரின் உடலாகும்.
மேலும், 1611ஆம் ஆண்டு ஜேம்ஸ் அரசர் வெளியிட்ட பைபிளை மேற்பார்வையிட்டவர் தான் இந்த பேன்கிராஃப்ட் பேராயர் என்றும் தெரியவந்துள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறந்த பேராயர்கள்: லண்டனில் உடல்கள் கண்டுபிடிப்பு...
Reviewed by Author
on
April 17, 2017
Rating:

No comments:
Post a Comment