மன்னார் பேசாலையில் பாரியம்பரிய உடக்கு பாஸ் இன்று மாலை 6.30 மணிக்கு......
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு மக்களால் பேசாலையில் பாரியம்பரிய உடக்கு பாஸ் வியாழன், வெள்ளி (06-07.04.2017) ஆகிய இரு தினங்கள் காண்பிக்க இருப்பதால் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந் தொகையான மக்கள் இவ்விடத்துக்கு வருகை தர இருப்பதாக தெரிய வருகிறது.
கிறிஸ்தவர்களின் தவக்காலமான கிறிஸ்துவின் பாடுகளின் சிந்தனையை தூண்டும் விதமாக காண்பிக்கப்படும் இவ் உடக்கு பாஸானது ஒரு பரிசுத்த நிகழ்வாக இருப்பதால் இவ் நிகழ்வு நடைபெறும் இரு தினங்களும் அரசின் விஷேட அணுமதிக்கிணங்க பேசாலை பகுதியிலுள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் பரிசுத்த நிகழ்வை முன்னிட்டு பேசாலையில் இரு தினங்களும் கடற்தொழில் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் வியாழக்கிழமை (06) காலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் பங்கு தந்தை அருட்பணி. அலெக்ஸ்சாண்டர் பெனோ அடிகளாரின் தலைமையில் விஷேட வழிபாடுகள் இடம்பெறுகின்றது.
மன்னார் பேசாலையில் பாரியம்பரிய உடக்கு பாஸ் இன்று மாலை 6.30 மணிக்கு......
Reviewed by Author
on
April 06, 2017
Rating:

No comments:
Post a Comment