வவுனியாவில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு-Photo
வவுனியா பொது வைத்தியசாலையில் பிராந்திய மத்திய இரத்த வங்கியினை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின இன்று திறந்து வைத்தார்.
நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் 80 மில்லியன் ரூபா நிதியில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இரத்த வழங்கல் சேவை நிலையத்தையும், மாமடுவ பிரதேச வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு நிலையமும் இன்று மத்திய சுகாதார அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
வடக்கிற்காக இரண்டு நாள் விஜயமாக வருகை தந்த சுகாதார அமைச்சர் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்திவு, கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள வைத்திசாலைகள் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் பார்வையிடவுள்ளதுடன் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் முதலாவது நிகழ்வாகவே இரத்த வங்கி வவுனியா பொது வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி. சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், ஏ. ஜெயதிலக, செ. மயூரன் உட்பட சுகாதார திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு-Photo
Reviewed by NEWMANNAR
on
April 02, 2017
Rating:

No comments:
Post a Comment