அண்மைய செய்திகள்

recent
-

புத்தாண்டு வாழ்த்து கூறிய கனடிய பிரதமர்....


கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களின் புத்தாண்டு தினத்தை வரவேற்கிறேன். இந்த புத்தாண்டில், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் கூடி கொண்டாடுவதோடு மட்டுமின்றி வரும் வருடம் அவர்களுக்கு சிறப்பாக அமைய கடவுள் வழி காட்டுவார்.

கனடா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் பல்வேறு இன,மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உள்ளது.

இந்நிலையை ஏற்படுத்தியதில் தமிழர்களின் பங்கு மிகப்பெரியது. அதற்காக அவர்களுக்கு நன்றி.

அரசின் சார்பாக ஒரு அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டை கொண்டாட கனடா அரசின் சார்பாக தமிழர்களுக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து கூறிய கனடிய பிரதமர்.... Reviewed by Author on April 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.