அண்மைய செய்திகள்

recent
-

முதல் திருநங்கை பொலிஸ் அதிகாரியாக பிரித்திகா யாசினி....


சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு பொலிஸ் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தைச் சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. திருநங்கையான இவர், தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற பொலிஸ் துணை ஆய்வாளர் பணிக்கான பரீட்சையை எழுதினார்.

இதில் அவர் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை பொலிஸ் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அவருக்கு மாநகர பொலிஸ் ஆணையர் சுமித்சரண் கடமை நியமன ஆணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வழங்கினார்.


இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு பொலிஸ் உயர் பயிற்சி நிலையத்தில் யாசினி பயிற்சி பெற்று வந்தார்.


இந்நிலையில் நேற்று நடைபெற்ற பணி நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது எஸ்.ஐ.பணிக்கு தேர்வான பிரித்திகா யாசினி தருமபுரியில் கடமையாற்ற நியடனம் வழங்கப்பட்டு கடமையிலீடுபட்டுள்ளார்.


முதல் திருநங்கை பொலிஸ் அதிகாரியாக பிரித்திகா யாசினி.... Reviewed by Author on April 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.