அண்மைய செய்திகள்

recent
-

தாய் மொழியில் பேச தடை விதிக்கும் பள்ளிக்கு அபராதம்? நமக்கும் தேவை இப்படி ஒரு முதலமைச்சர்!


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர்.

இன்று அவர் போட்டுள்ள உத்தரவும் அப்படித்தான். அனைத்து பள்ளிகளிலும் மலையாளத்தை கட்டாய பாடமாக்கி உத்தரவிட்டுள்ளார்.

சி.பி.எஸ்.இ. ஐ. சி.எஸ்.இ. பள்ளிகளிலும் இந்த உத்தரவு கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களைச் சேர்ந்தோருக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சில பள்ளிகளில் மலையாளம் பேச மாணவர்களுக்கு தடை இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளதாகவும், இவ்வாறு தடை விதிக்கும் பள்ளிகள் கண்டறியப்பட்டால், பள்ளியின் முதல்வருக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மலையாளம் கட்டாய முதல்பாடமாக கேரளாவில் சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பை பெற சரளமாக மலையாளம் பேச வேண்டும் என உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாய் மொழியில் பேச தடை விதிக்கும் பள்ளிக்கு அபராதம்? நமக்கும் தேவை இப்படி ஒரு முதலமைச்சர்! Reviewed by Author on April 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.